Published:Updated:

2 நாள்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழை! - நேபாள வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில், பருவமழைக் காலம் முழுவதும் பொழிய வேண்டிய மழை குறைந்த நாள்களில் பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேபாளம்
நேபாளம் ( AP )

நேபாளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் பருவமழை தொடங்கியதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேபாள வெள்ளப்பெருக்கு
நேபாள வெள்ளப்பெருக்கு
AP

இந்த இயற்கை பேரிடரால் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 24 பேர் காணாமல் போயுள்ளனர்.

நேபாளத்தில் உள்ள 25-க்கும் அதிகமான மலை மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு மட்டும் சுமார் 10,385 குடும்பங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. காத்மாண்டில் இருந்து வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ள மக்களைக் காப்பாற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேபாள மழை
நேபாள மழை
AP

நேபாளம் முழுவதும் 27,380 காவலர்கள் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் பல பகுதிகளில் இன்னும் இரண்டு நாள்களுக்குக் கனமழை தொடரும் என அந்நாட்டு வெள்ள கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. அங்குள்ள பாகமதி, கமலா, சப்தகோஷி ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் அதன் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி அரசு அறிவித்துள்ளது.