Published:Updated:

பணம், காசு இல்ல, சந்தோஷம் இருக்கு!- அமெரிக்கர்களை விட மகிழ்ச்சியாக வாழும் நேபாள மக்கள்

நேபாள மக்கள்
நேபாள மக்கள்

தீவிரவாதிகளின் புகலிடமாகப் பார்க்கப்படும் பாகிஸ்தான் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 29- வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை என்ன?

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் (2019- ம் ஆண்டு) வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் பின்லாந்து நாடு மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. 153 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இந்தியாவுக்கு 144-வது இடமே கிடைத்துள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் டென்மார்க் உள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, நெதர்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, ஆஸ்திரியா, லக்ஸம்பர்க் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பின்லாந்து
பின்லாந்து

முதல் 10 நாடுகள் பட்டியலில் முதன்முறையாக லக்ஸம்பர்க் இடம் பிடித்துள்ளது. பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் நியூசிலாந்தை தவிர மற்ற நாடுகள் அனைத்துமே ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்தவை. பட்டியலில் கனடா 11- வது இடத்திலும் பிரிட்டன் 13- வது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவுக்கு 18-வது இடம் கிடைத்துள்ளது.

இதில், பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், நேபாள மக்கள் அமெரிக்கர்களை விட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதுதான். உலகளவில் நேபாளத்துக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. குட்டி நாடான நேபாளத்தில் பெரிய அளவில் மேம்பாடுகள் இல்லையென்றாலும் மக்களை அந்த நாட்டு அரசு மகிழ்ச்சியாக வைத்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாகப் பார்க்கப்படும் பாகிஸ்தான் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 29- வது இடத்தில் உள்ளது.

அழகிய பின்லாந்து
அழகிய பின்லாந்து

பிற தெற்காசிய நாடுகளான வங்கதேசம், இலங்கை ஆகியவை முறையே 107, 130- வது இடத்தைப் பெற்றுள்ளன. மகிழ்ச்சி இல்லாத மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தெற்கு சூடான், ஜிம்பாப்வே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

`நான் தவறு செய்துவிட்டேன்; ஆனால் பாஸுக்கு உண்மையாக இருந்தேன்!’ -போலி call centre-ன் பவர் பாயின்ட்

மகிழ்ச்சி இல்லாத மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 10-வது இடம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக நிலை, பொருளாதார நிலை, சுதந்திரம் மற்றும் ஊழல் லஞ்சம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு ஐ.நா. அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு