Published:Updated:

வங்கியில் இவ்வளவு பணம் வைத்திருந்தால் போதும், 10 ஆண்டுக்கு வீசா; இந்தோனேசியாவின் புதிய அறிவிப்பு!

வீசா

உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளமாக விளங்கும் பாலித் தீவை (Bali) பயன்படுத்தி இந்தோனேசியா அரசு தன் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

வங்கியில் இவ்வளவு பணம் வைத்திருந்தால் போதும், 10 ஆண்டுக்கு வீசா; இந்தோனேசியாவின் புதிய அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளமாக விளங்கும் பாலித் தீவை (Bali) பயன்படுத்தி இந்தோனேசியா அரசு தன் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

Published:Updated:
வீசா

சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் பல நாடுகள் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தோனேசியாவும் ஒன்று. இதனிடையே அந்நிலையிலிருந்து மீண்டு வர இந்தோனேசிய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி போன்ற பல நாடுகள் பணக்காரர்கள், டெக் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பல தரப்பினரை முதலீட்டு செய்யவும், வர்த்தகத்தைத் தொடங்கவும் தங்கள் நாடுகளுக்கு அழைத்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் இந்தோனேசியாவும் இணைந்துள்ளது. தற்போது இந்தோனேசியா அரசு ‘Second Home’ என்ற பெயரில் விசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசாவைப் பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 2 பில்லியன் ரூப்பியா (Indonesia currency) அல்லது 130,000 டாலர் அளவிலான தொகையைத் தங்கள் வங்கிக் கணக்குகளில் வைத்திருக்க வேண்டும்.

பாலித்  தீவு
பாலித் தீவு

அப்படி வைத்திருப்பவர்களுக்கு 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு வீசா வழங்கப்படும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்தோனேசியா அரசு பாலி நகரத்தைச் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக அக்டோபர் 14-ம் தேதி திறந்தது. இந்நிலையில் புதிய விசா திட்டத்தின் உதவியால் வெளிநாட்டினரை அதிகளவில் தன் நாட்டில் சேர்ப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தோனேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இந்தப் புதிய விசா கொள்கை கிறிஸ்துமஸ் அன்று அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.