Published:Updated:

`எங்களுக்குச் சுதந்திரம் வேண்டாம்’ - மறுக்கும் நியூ கெலடோனியா மக்கள்... காரணம் என்ன?

நியூ கெலடோனியா
News
நியூ கெலடோனியா ( Clotilde Richalet )

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், ``எந்தப் பக்கமும் சார்பு எடுக்காமல், இந்த வாக்கெடுப்பைச் சரியாக நடத்தி முடிப்பதே எனது கடமை" என்று அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு 2,000 கிலோமீட்டர் கிழக்கே உள்ள 1,85,000 வாக்காளர்களைக்கொண்ட தீவு நாடான 'நியூ கெலடோனியா'வில் மூன்றாவது முறையாகச் சுதந்திரம் தொடர்பான வாக்கெடுப்பு நடந்துள்ளது.

'நியூ கெலடோனியா'வின் பசபிக் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியாகவே தொடர வாக்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெலடோனியா
கெலடோனியா
Clotilde Richalet

ஏற்கெனவே 2018-ல் ஒரு முறையும், கடந்த வருடம் ஒரு முறையும் குடிமக்களிடம் சுதந்திரம் குறித்துக் கருத்து கேட்டும், அவர்கள் மறுத்திருந்த நிலையில் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நியூ கெலடோனியாவை முழுவதுமாக சுதந்திரமுடைய ஒரு நாடாக அறிவிக்கலாமா, வேண்டாமா என்பதே மக்கள் முன் வைக்கப்பட்ட கேள்வி.

சுதந்திரச் சார்பு பிரசார அமைப்பினர் இந்த வாக்கெடுப்பைத் தற்போதைய நிலையில் நடத்தினால், கொரோனா பாதிப்பு காரணத்தால் சரியான முறையில் வாக்கெடுப்பு நடைபெறாது என்பதால் தள்ளிவைக்குமாறு கேட்டுகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாக்கெடுப்பு
வாக்கெடுப்பு
Clotilde Richalet

பெருவாரியான மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை என்று முடிவெடுத்திருப்பதால் இந்த வாக்கெடுப்புக்குப் பெரிய பலன் எதுவுமில்லை என்று மக்களில் சிலர் கருதுகின்றனர்.

இந்த வாக்கெடுப்பின் முக்கியத்துவங்களுள் ஒன்று, உலகின் பத்து சதவிகித நிக்கல் இரும்பு ஆலையை உடைய பிரான்ஸ் நாட்டின் முக்கியப் பகுதிகள் இங்கு இருப்பதே. பிரான்ஸ் நாடு இந்தப் பிரதேசத்தைக் கொண்டிருப்பதால் பசிபிக் மாகாணத்தின் ஆட்சி அவர்களின் கையிலிருப்பதுபோல் ஆகிறது.

ஒருவேளை பிரான்ஸ் ஆட்சி அங்கிருந்து அகன்றால், அங்கே கால்பதிக்க சீனா தயார்நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சுற்றுவட்டார நாடுகளான பிஜி, சாலமன் தீவுகள், பாப்புவா நியூ கினியா முதலியவை ஏற்கெனவே சீனா ஆதரவுநிலையில் செயல்படுவதாகக் கருத்து நிலவுகிறது.

`எங்களுக்குச் சுதந்திரம் வேண்டாம்’ - மறுக்கும் நியூ கெலடோனியா மக்கள்... காரணம் என்ன?
Clotilde Richalet

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், ``எந்தப் பக்கமும் சார்பு எடுக்காமல், இந்த வாக்கெடுப்பைச் சரியாக நடத்தி முடிப்பதே எனது கடமை" என்று அறிவித்துள்ளார்.

2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் ஞாயிறு அன்று வாக்கெடுப்பு நடந்த நிலையில், ஒரு சாலைமறியலைத் தவிர பெரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

ஜூன் மாதம், 2023-ல் புதிதாகத் தொடங்கவுள்ள திட்டம் தொடர்பாக மற்றொரு வாக்கெடுப்பும் நடக்கவிருக்கிறது.

கெலடோனியா
கெலடோனியா
Clotilde Richalet

கொரோனா முதல் அலையில் பெருவாரியான தாக்கம் இல்லாமல் தப்பிப் பிழைத்த நிலையில், டெல்டா வகை வந்த நேரத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகியுள்ளனர். சுதந்திர இயக்கத்தினர் ஞாயிறு அன்று நிகழ்ந்த வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரியுள்ளனர்.

தற்போதைய நிலையை கருத்தில்கொண்டால் 1980-ம் ஆண்டு நிகழ்ந்ததுபோல சுதந்திரச் சார்பு இயக்கத்தினருக்கும், சுதந்திரத்தை எதிர்க்கும் தரப்பினருக்கும் மோதல் எழ வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.