Published:Updated:

அமெரிக்கா: வறண்டுபோன நதி - 113 மில்லியன் ஆண்டுகள் பழைமையான டைனோசரின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!

டைனோசரின் கால் தடம்

113 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த டைனோசரின் கால் தடங்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா: வறண்டுபோன நதி - 113 மில்லியன் ஆண்டுகள் பழைமையான டைனோசரின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!

113 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த டைனோசரின் கால் தடங்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
டைனோசரின் கால் தடம்

டைனோசர்கள் குறித்து நம்மில் பலருக்கும் பல்வேறு கற்பனைகள் இருக்கலாம். சுமார் 10-15 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய விண்கல் பூமியில் மோதி சில இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டதால்தான் டைனோசர்கள் இனம் அழிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த டைனோசர்களின் கால் தடங்கள், படிமங்கள் இன்றளவும் சில இடங்களில் காணப்படுவதாகச் செய்திகள் வந்த வண்ணமேதான் இருக்கின்றன.

உதாரணமாகக் கடந்த ஜூலை 23-ம் தேதி கூட, 10 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானது. அந்த வகையில் தற்போது டெக்சாஸில் உள்ள பூங்கா ஒன்றிலும் டைனோசரின் காலடி தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டைனோசரின் காலடி தடங்கள்
டைனோசரின் காலடி தடங்கள்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான வெப்பம், அதனால் உருவாகும் காட்டுத்தீ போன்றவற்றால் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் டெக்சாஸில் உள்ள Dinosaur Valley State Park -லும் கடும் வறட்சி காரணமாக நதி வறண்டு போனதால், அந்த நதியில் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைனோசரின் காலடித் தடங்கள் தெரிந்திருக்கின்றன.

அந்த டைனோசரின் காலடித் தடங்களை வைத்து அவை சுமார் 15 அடி உயரமும் 7 டன் எடையையும் கொண்டிருக்கும் Theropod Acrocanthosaurus என்ற இனத்தைச் சேர்ந்ததாகவும் அல்லது 60 அடி உயரமும் 44 டன் எடையும் கொண்ட Sauroposeidon என்ற இனத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம் என்று கணித்துள்ளனர். Dinosaur Valley State Park-ல் காணப்பட்ட 113 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த டைனோசரின் கால் தடங்களை நிகழ்காலத்தில் மட்டுமின்றி எதிர்காலத்திலும் பாதுகாப்போம் என்று பூங்காவினுடைய செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.