Published:Updated:

பறவைகளுக்கு உணவு அளித்ததற்காக முதியவர் 3 முறை கைது; ஏன் தெரியுமா?

பறவைகளுக்கு உணவளித்தல் ( Pixabay )

உள்ளூர் சட்டத்தின்படி, கிராம மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் பறவைகளுக்கு உணவளிக்கும் தட்டுகள், இரண்டு மட்டும் வைத்திருக்க அனுமதி உள்ளது. அதுவும், அவை நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.

பறவைகளுக்கு உணவு அளித்ததற்காக முதியவர் 3 முறை கைது; ஏன் தெரியுமா?

உள்ளூர் சட்டத்தின்படி, கிராம மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் பறவைகளுக்கு உணவளிக்கும் தட்டுகள், இரண்டு மட்டும் வைத்திருக்க அனுமதி உள்ளது. அதுவும், அவை நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.

Published:Updated:
பறவைகளுக்கு உணவளித்தல் ( Pixabay )

“நெற்பயிரும் ஒரு உயிர்தானே? வாடிப்போகாதா” என கடைசி விவசாயி படத்தில் முதியவர், நெற்பயிர் வாடிப் போகக்கூடாது என போராடுவார். அதேபோல், இங்கு ஒரு முதியவர், காவலர்களால் கைது செய்யப்பட்ட போதும் தொடர்ந்து பறவைகளுக்கு உணவளித்து வந்துள்ளார்.

பறவை
பறவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூயார்க் நகரம், சோடூஸ் பாயின்ட் என்ற கிராமத்தில், 71 வயதான டொனால்ட் ஆண்டல் (Donald Antal) வசித்து வருகிறார். அவருடைய வசிப்பிடத்தில், பறவைகளுக்கு உணவளிக்க இரண்டு டஜன் தட்டுகளில் (feeding trays) தானியங்களையும், வேர்க்கடலைகளையும் வைத்துள்ளார். இதனால் நிறைய பறவைகள் உணவெடுக்க அங்கு வந்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், கிராமத்தின் உள்ளூர் சட்ட விதிகளை மீறியதாகக்கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர், காவல் துறை அதிகாரிகள். அதாவது உள்ளூர் சட்டத்தின்படி, கிராம மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், பறவைகளுக்கு உணவளிக்கும் தட்டுகள் இரண்டு மட்டுமே வைக்க அனுமதி உள்ளது. அதுவும், அவை நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்தை மீறி, அதிக அளவில் பறவைகளுக்கு உணவளித்த குற்றத்திற்காக தொடர்ந்து மூன்று வாரத்தில், மூன்று முறை இந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது
கைது

இந்த செய்தியை கண்ட சமூக வலைதளவாசிகள், அந்த முதியவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, காவல் துறையினரை வன்மையாக கண்டித்தும், கேலியாக கமென்டுகளை பறக்க விட்டும் வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism