Published:Updated:

ஏலத்தில் வாங்கிய பழைய சூட்கேஸ்... திறந்த குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி! - போலீஸ் விசாரணை

குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி ( ட்விட்டர் )

பழைய சூட்கேஸ் என்பதால் வித்தியாசமான பொருள்கள் இருக்கும் என எதிர்பார்த்தபடி அந்த சூட்கேஸை திறந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

நியூசிலாந்தில் நடந்த ஏலத்தில் ஒரு குடும்பம் கலந்துகொண்டது. அந்த ஏலம் `ஸ்டோரேஜ் யூனிட்' என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. ஏலத்தில் கலந்துகொண்ட குடும்பம் பழைய சூட்கேஸ் ஒன்றை ஏலத்தில் சொந்தமாக்கியிருக்கிறது. மேலும், அந்தக் குடும்பத்தினர் அதை அங்கேயே சோதிக்காமல் வீட்டுக்குவந்து திறந்து பார்த்திருக்கிறார்கள். பழைய சூட்கேஸ் என்பதால் வித்தியாசமான பொருள்கள் இருக்கும் என எதிர்பார்த்தபடி அந்த சூட்கேஸை திறந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சூட்கேஸ் (மாதிரி படம்)
சூட்கேஸ் (மாதிரி படம்)
pixabay

காரணம்.... திறந்ததும் துர்நாற்றம் வீசிய அந்த பழைய சூட்கேஸ் முழுவதும் மனித உடல்களின் பாகங்கள் இருந்திருக்கின்றன. அதைக் கண்டு அதிர்ந்துபோன அந்தக் குடும்பம், உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினர், ``சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் இருந்தது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த சூட்கேஸ் ஏலத்துக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.