சமூகம்
Published:Updated:

நியூஸ் எம்பஸி!

டொனால்டு ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
News
டொனால்டு ட்ரம்ப்

‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ கதையாக ட்ரம்ப் தரப்பு சமாளித்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி மருந்துகளின் பாதுகாப்புத் தன்மையைச் சோதிக்கும் பணியில் இஸ்ரேல், தனது உளவு அமைப்பான மொஸாத் (Mossad) உளவாளிகளை ஈடுபடுத்தியிருக்கிறது. பெருந்தொற்று கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயன்றுகொண்டிருக்கின்றன. வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் கொரோனா தடுப்பூசி நிரந்தர இடம்பிடித்துவிட்டது. இந்தநிலையில், சீனத் தயாரிப்பு தடுப்பூசிகளை வாங்கி, அவற்றைப் பரிசோதிக்கும் பணியில் மொஸாத் உளவாளிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். உளவு பார்ப்பதில் உலக அளவில் முன்னணி அமைப்பாகக் கருதப்படும் மொஸாத், இந்தப் பணியில் இறங்கக் காரணம் அமெரிக்கா - சீனா இடையிலான பனிப்போர் என்கிறார்கள். உளவு அமைப்புகளுக்கு உள்நாட்டில் என்ன வேலை என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க, ஆளும் நெதன்யாகு அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

`உளவு’ பாலிடிக்ஸ்!

மெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தேர்தல் பிரசார இணையதளத்தை முடக்கி, குடியரசுக் கட்சி முகாமுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள் ஹேக்கர்கள். donaldjtrump.com என்ற அந்தத் தளத்தை முடக்கியவர்கள், `அதிபர் ட்ரம்ப்பால் தினசரி பரப்பப்படும் போலிச் செய்திகள் இந்த உலகத்துக்குப் போதும்’ என்ற வாசகத்தை இடம்பெறச் செய்திருந்தனர். அக்டோபர் 27-ம் தேதி முடக்கப்பட்ட இணையதளம், பல மணி நேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டு, பழைய நிலைக்குத் திரும்பியது. ‘இணைய தளத்திலிருந்து யாருடைய தனிப்பட்ட தகவலும் திருடப்படவில்லை’ என, ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ கதையாக ட்ரம்ப் தரப்பு சமாளித்திருக்கிறது.

`சீன வைரஸ்’ காரணமா இருக்குமோ?

புகுஷிமா அணு உலையில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் கதிர்வீச்சு கலந்த நீரை 2022-ம் ஆண்டுக்குப் பிறகு கடலில் திறந்துவிட ஜப்பான் எடுத்திருக்கும் முடிவு, சூழல் ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. 2011 சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையில், கதிர்வீச்சு கலந்த சுமார் 1.23 மில்லியன் மெட்ரிக் டன் நீர், சேமிப்புத் தொட்டிகளில் சேகரித்துவைக்கப்பட்டிருக்கிறது. ‘அந்த நீரில் கலந்திருக்கும் கார்பன்-14 என்ற கதிரியக்கத் தனிமம் மனித டி.என்.ஏ-வையே பாதிக்கும் தன்மைகொண்டது’ என்று அலாரம் அடிக்கிறது கிரீன் பீஸ் அமைப்பு. ‘கார்பன்-14 பசிபிக் கடலில் கலந்தால், மனித இனத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்’ என்று தென்கொரியா உள்ளிட்ட ஜப்பானின் அண்டை நாடுகளும் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றன. ஆனால், இவை எதற்கும் ஜப்பான் செவிசாய்ப்பதுபோல் இல்லை.

விபரீத முடிவு!