Published:Updated:

`வேட்டியில் கவனம் ஈர்த்த அபிஜித் பானர்ஜி; பிரமாண்ட விருந்து!’- நோபல் பரிசு வழங்கும் விழா ஹைலைட்ஸ்

1969-ல் இருந்துதான் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ரிங்ஸ் பேங்கின் 300-ம் ஆண்டு நிறைவையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.

அபிஜித் பானர்ஜி
அபிஜித் பானர்ஜி

புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர், உலகளாவிய தொழிலதிபர், வேதியியலாளர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஆல்ஃபிரட் நோபல் தனது சொத்தில் பெரும் பகுதியை பல துறைகளில் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசு வழங்க ஏற்பாடு செய்யும்படி தனது உயிலில் எழுதியிருந்தார். அதன்படி நோபல் பரிசு கடந்த 1901 முதல் 118 ஆண்டுகளாக ஆல்பிரட் நோபலின் நினைவாக, அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி, அவர் பிறந்த இடமான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அவரது பெயரிலேயே 6 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

`வேட்டியில் கவனம் ஈர்த்த அபிஜித் பானர்ஜி; பிரமாண்ட விருந்து!’- நோபல் பரிசு வழங்கும் விழா ஹைலைட்ஸ்

இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என மொத்தம் 6 துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி இரவில், நோபல் பரிசளிப்பு விழா ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் கான்செர்ட் ஹாலில் (Stockholms konserthus) நடைபெற்றது. அமைதிக்கான பரிசளிப்பு விழா நார்வேயில் உள்ள ஓஸ்லோ சிட்டி ஹாலில் நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவில் பரிசு பெற்றவர்களின் சிறப்பு உரைக்குப் பிறகு, அவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் சுவீடன் நாட்டு அரசர் Carl Gustaf Folks Hubertus வழங்கினார். அதன்பின் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 250 மாணவர்கள் உட்பட மொத்தம் 1,300 பேர் கலந்துகொண்டனர்.

`வேட்டியில் கவனம் ஈர்த்த அபிஜித் பானர்ஜி; பிரமாண்ட விருந்து!’- நோபல் பரிசு வழங்கும் விழா ஹைலைட்ஸ்

118 வருட வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஆண்டுதான் இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிய பரிசு ஒரேநாளில் அறிவிக்கப்பட்டிருந்தது. இலக்கியத்துக்கான 2019-ம் ஆண்டுக்கான விருது பீட்டர் ஹாண்ட்கேவுக்கும், 2018-க்கான இலக்கிய விருதை ஓல்காடொர்கார்சுக்கும் அளிக்கப்பட்டது. வேதியியலுக்கான விருது அஹிரா யோசினா, M. ஸ்டான்லி விட்டிங்ஹம் மற்றும் குட் எனப்புக்கும் வழங்கப்பட்டது. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜிம் பீப்பிள்ஸ், மைக்கேல் மேயர், டிடையர் க்யூலோஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது. இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வில்லியம் G.கேலின், கிரிக் L. செமன்ஜா, பீட்டர் J.ரெட்கிளிப் ஆகிய மூவரும் பெற்றனர்.

1969-ல் இருந்துதான் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ரிங்ஸ் பேங்கின் 300-ம் ஆண்டு நிறைவையொட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட பொருளாதாரத்துக்கான விருது மைக்கேல் கிரிமர் மற்றும் தம்பதியரான அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டியூப்லோவுக்கு வழங்கப்பட்டது. அபிஜித் பானர்ஜி அமெரிக்க இந்திய குடிமகனாவர். இதுவரை 5 இந்தியர்களும் 8 இந்திய வம்சாவளியினரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஜித் பானர்ஜி நிகழ்ச்சியில் பந்த்கலா ஜாக்கெட் மற்றும் வேட்டி கட்டி வந்திருந்தார், அவரது உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

`வேட்டியில் கவனம் ஈர்த்த அபிஜித் பானர்ஜி; பிரமாண்ட விருந்து!’- நோபல் பரிசு வழங்கும் விழா ஹைலைட்ஸ்

ஆவலுடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமத் அலி பெற்றார். நோபல் பரிசளிப்பு விழாவுக்குப் பின் நோபல் பரிசு பெற்றவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஸ்வீடன் அரசர் Carl Gustaf Folks Hubertus ஸ்வீடன் அரசி Sylvia மற்றும் ராஜ குடும்பத்தினர்கள் பரிசளிப்பு விழாவிலும் அதைத்தொடர்ந்த விருந்திலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமத் அலிக்கு நார்வேயின் அரசர் Herald V அரசி Sonja ஆகியோர் முன்னிலையில் நோபல் கமிட்டியின் இயக்குநர் Kaci kullmann v பார்வையாளர்களின் கரவொலிக்கிடையே வழங்கினார். இதைத் தொடர்ந்து அவரை கௌரவிக்கும் வகையில் நடந்த விருந்தில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

`வேட்டியில் கவனம் ஈர்த்த அபிஜித் பானர்ஜி; பிரமாண்ட விருந்து!’- நோபல் பரிசு வழங்கும் விழா ஹைலைட்ஸ்

உலகளாவிய கருத்து வேறுபாடுகளுக்கு இடையே நோபல் பரிசளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது பெறும் பீட்டர் ஹாண்ட்கேவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. போஸ்னியா போர் குறித்த அவரது தவறான கருத்துகள் காரணமாக பால்கன் நாடுகளான போஸ்னியா, துருக்கி, குரேஷ்யா, வட மாசிடோனியா மற்றும் அல்பேனியா நாடுகள் இவ்விழாவை புறக்கணித்துள்ளன. இலக்கியத்துக்கான நோபல் பரிசு குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடன், நார்வே நாட்டு விழாவாக இது கருதப்படாமல் உலக அளவில் கவனம் ஈர்க்கும் விழாவாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு.