Published:Updated:

`ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட 17 மடங்கு அதிகம்!' -இஸ்ரோவை அதிரவைத்த வடகொரியா அணுஆயுத சோதனை ஆய்வு

வடகொரிய அதிபர் நடத்திய அணு ஆயுத சோதனை, ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட மிகப் பெரியது எனக் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 2011-ம் ஆண்டு தன் தந்தை இறந்த பிறகு, அந்நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு, அண்டை நாடான, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பெரும் குடைச்சல் கொடுத்தார். அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றின் மூலம் அமெரிக்காவையே மிரட்டினார் கிம் ஜாங் உன்.

கிம் - ட்ரம்ப்
கிம் - ட்ரம்ப்

கிம் நடத்தும் பாதுகாப்பில்லாத அணு ஆயுத சோதனையை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதைச் சற்றும் பொருட்படுத்தாத கிம், தன் சோதனையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். 2017-ம் ஆண்டு இவர் நடத்திய அணு ஆயுத சோதனை சக்தி வாய்ந்ததாக இருந்தது. இதையடுத்து, `வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என அமெரிக்கா கடுமையாக மிரட்டியது.

கிம்மின் திக் திக்... குதிரை சவாரி! - பதற்றத்தில் வடகொரியா மக்கள்

அதன் பின்னரே, தன் சோதனையைக் கைவிட்டார் கிம். இதையடுத்து அமெரிக்க அதிபர் - வட கொரிய அதிபர் சந்திப்பும் தென் கொரியா, வடகொரியா நட்பு நாடாகவும் மாறியது. தற்போதுதான் வடகொரியாவில் சற்று அமைதி நிலவி வருகிறது.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு மண்டாப் மலைப் பகுதியில் வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் 3 பேர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இஸ்ரோ
இஸ்ரோ

இஸ்ரோவைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால், ஏ.எஸ்.ராஜவாட் ஆகியோர் நடத்திய ஆய்வின் முடிவில், 2017-ம் ஆண்டு வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜப்பான் செயற்கைக்கோளின் தகவல்படி அரை மீட்டர் அளவுக்கு மலை அமைப்பு மாறியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு சக்திவாய்ந்தது எனத் தெரியவந்துள்ளது. மேலும், ஹிரோஷிமா அணுகுண்டு 15 டன் சக்தி வாய்ந்தது. அதுவே வடகொரியா அணுகுண்டு 245 முதல் 271 கிலோ டன் சக்திவாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan