Published:Updated:

``சக ஊழியரை மது அருந்துவதற்கு அழைக்கத் தவறுவதும் பழிவாங்கல் நடவடிக்கையே..!" - லண்டன் தீர்ப்பாயம்

பணியிடம் ( சித்திரிப்புப் படம் )

`உடன் பணியாற்றும் சக ஊழியரை மது அருந்துவதற்கு அழைக்கத் தவறினால், அதுவும் பழிவாங்கல் நடவடிக்கைதான்’ என லண்டன் வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது.

``சக ஊழியரை மது அருந்துவதற்கு அழைக்கத் தவறுவதும் பழிவாங்கல் நடவடிக்கையே..!" - லண்டன் தீர்ப்பாயம்

`உடன் பணியாற்றும் சக ஊழியரை மது அருந்துவதற்கு அழைக்கத் தவறினால், அதுவும் பழிவாங்கல் நடவடிக்கைதான்’ என லண்டன் வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
பணியிடம் ( சித்திரிப்புப் படம் )

கிழக்கு லண்டனில் உள்ள ஸ்ட்ராட்போர்டின் ஆஸ்பெர்ஸ் கேசினோவில் பணிபுரியும் 51 வயதான காசாளர் ரீட்டா லெஹர் என்பவர், லண்டன் வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ரீட்டா, ``என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களால் எனது கறுப்பு நிறம் மற்றும் வயது காரணமாக நான் ஒதுக்கப்படுகிறேன். என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் வெளியே சென்று மது அருந்துகிறார்கள். ஆனால், என்னை மட்டும் ஒதுக்கிவைக்கின்றனர். அதனால் நான் அந்த நிறுவனத்தைவிட்டு விலகிவிட்டேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பணியிடம்
பணியிடம்
சித்தரிப்புப் படம்

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி சாரா மூர், ``உங்களுக்குப் பிறகு பணியில் சேர்ந்த சக ஊழியர்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு நீங்கள் நிராகரிக்கப்பட்டீர்களா?" எனக் கேட்டனர். அதற்கு ரீட்டா லெஹர் ,"ஆம்! ஆனால், அவர்களில் யாரும் கலப்பினத்தவர்களோ, கறுப்பினத்தவர்களோ இல்லை. பதவி உயர்வு பெற்றவர்களும் என்னைவிட இளையவர்கள். நான் நவம்பர் 2011-ல் பணிபுரியத் தொடங்கினேன். நான் பலமுறை உயர் பதவிகளுக்கு விண்ணப்பித்த பிறகும், என்னுடைய மேலதிகாரிகளால் நான் நிராகரிக்கப்பட்டேன்" எனத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணி நீக்கம்
பணி நீக்கம்

இதைத் தொடர்ந்து, நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக, ``வேண்டுமென்றே சக ஊழியரை மது அருந்தவோ அல்லது மற்ற பானங்கள் அருந்தவோ செல்லும்போது ஒதுக்கிவைப்பது அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாகும். தவறே செய்யாமல் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற மனஉளைச்சலில் நிறுவனத்தைவிட்டு வெளியேறிய லெஹருக்கு அந்த நிறுவனம் 74,113 பவுண்டு வழங்க வேண்டும். இந்தப் பணம் லெஹரின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கும், நேர இழப்புக்கும், சட்டவிரோதமாகப் பழிவாங்கப்பட்டதற்கும் அந்த நிறுவனம் வழங்கப்போவதாகும். அதேபோல நியாயமற்ற பணிநீக்கம், இனம் மற்றும் வயதுப் பாகுபாடு ஆகியவற்றின் மூலம் அவமானப்படுத்தப்பட்டதற்கான உரிமை கோரல்களுக்காகவும் இந்தத் தொகை அவருக்கு வழங்கப்படுகிறது" எனத் தீர்ப்பு வழங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism