Published:Updated:

இந்தியக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டம்! #MyVikatan

அமெரிக்காவில் நடந்த போராட்டம்!
அமெரிக்காவில் நடந்த போராட்டம்!

அமெரிக்காவின் முதல் மாநிலம் டெலாவரில் டிசம்பர் 21-ம் தேதியன்று போராட்டம் நடைபெற்றது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தையும் (CAA), தேசியக் குடியுரிமைப் பதிவேட்டையும் (NRC) எதிர்த்து, இந்தியா மற்றும் உலகெங்கும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் முதல் மாநிலம் டெலாவரிலும் டிசம்பர் 21-ம் தேதியன்று போராட்டம் நடைபெற்றது.

Representational Image
Representational Image

அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மத, இன அடிப்படையில் தம் குடிமக்களை வேறுபடுத்தாத, மதச்சார்பற்ற, சமத்துவ அரசியல் சட்டம். அத்தகைய அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக, மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து இஸ்லாமிய மக்களை மட்டும் தனிமைப்படுத்திப் புறக்கணிக்கும் வகையில் தற்போதைய குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தையே கேலிக்குரியதாக்கிவிடும். இது வன்மையாகக் கண்டிக்கப்பட்டு மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

பேச்சுரிமை மற்றும் தனி மனித உரிமைகளை உயர்த்திப்பிடிக்கும் அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தில் முதன்முதலாகக் கையெழுத்திட்டு அமெரிக்காவின் முதல் மாநிலமாகத் தன்னை நிலைநிறுத்திய பெருமைக்குரிய மாநிலம் டெலாவர். அத்தகைய சிறப்பு பெற்ற டெலாவரில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள், நீரின் உறைநிலையையொட்டிய கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது, இந்திய அரசியல் சட்டத்தை மீட்டெடுத்து, அனைத்து இந்திய மக்களையும் காப்பதற்காக இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக ஓர் அடையாளப் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Representational Image
Representational Image
AP

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒருமித்த குரலில் "India means Unity in Diversity, don't divide India", "No citizenship on the basis of religion", "Save Indian constitution, Save India", "Reject CAA", "Reject NRC" என்று உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர். வெறும் உணர்ச்சி முழக்கத்தோடு நிறுத்திவிடாமல், இந்த சட்டங்களின் நுணுக்கங்களையும் அதன் பாதிப்புகளையும் விளக்கிப் பேசினர்.

இப்போராட்டமானது எந்த ஒரு அமைப்பும் சாராத இந்திய மக்கள், தாமாக முன்வந்து நடத்திய போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

- துரை சுந்தரக்கண்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு