Published:Updated:

‘இறுதியில் திரைச்சீலை கிழிந்துவிட்டது!’ -பகிரங்கமாக ட்ரம்பை விமர்சித்த ஒபாமா #Coronavirus

ஒபாமா
ஒபாமா ( Representational image | AP )

கொரோனாவின் நெருக்கடியான நேரத்தில் அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் பராக் ஒபாமா.

சர்வதேச அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில்தான் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அங்கு 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 90,000-த்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை எதிர்த்து ஆரம்ப கட்டத்திலேயே முறையான நடவடிக்கை எடுக்காததே இந்த அளவு வைரஸ் பரவியதற்குக் காரணம் என அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் அதிபர் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

நியூயார்க்
நியூயார்க்
AP

அமெரிக்கா தற்போது இருக்கும் கடுமையான நேரத்தில் அங்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வு விதித்து நாட்டின் பொருளாதாரத்தைச் சரி செய்ய வேண்டும் என ட்ரம்ப் நினைக்கிறார். ஊரடங்கைத் தளர்த்தினால் மீண்டும் பெரும் வெடிப்பு ஏற்படும் எனக் கூறிய ஆய்வாளர்களின் எச்சரிக்கையை ஏற்க மறுத்து அவர்களை விமர்சித்தும் வருகிறார். அந்நாட்டு ஆளுநர்களின் கருத்தும் அதிபருக்கு எதிராகவே உள்ளது, அதிபருக்கும் ஆளுநர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்னை கொரோனாவை விடப் பெரிதாக உள்ளது.

`பேரழிவுக் காலத்தில் பெரும் குழப்பம்!. - ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்த ஒபாமா #Corona

என்னதான் எதிர்க்கட்சிகள் அதிபரை விமர்சித்து வந்தாலும் எதிர்க்கட்சியின் முக்கிய நபரான முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இதுவரை வைரஸ் தொடர்பாகவும் ட்ரம்ப் பற்றியும் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார். சமீபத்தில் ஒபாமா தன் கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் பேசும்போது அமெரிக்காவின் ஆளும் அரசை விமர்சித்திருந்தார். இந்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒபாமா ஒரு பொது நிகழ்ச்சியில் மறைமுகமாக ட்ரம்பையும் அரசின் செயல்பாடுகளையும் பகிரங்கமாக விமர்சித்துப் பேசியுள்ளார். ஒபாமா மிகவும் அரிதாகவே பகிரங்கமாகப் பேசுவார் என்பதால் தற்போது இவர் பேசியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

ஒபாமா மற்றும் ட்ரம்ப்
ஒபாமா மற்றும் ட்ரம்ப்
AP

அமெரிக்காவில் இணையம் மூலம் நடந்த ஒரு மேநிலை பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஒபாமா, மாணவர்கள் முன்னிலையில் அரசை விமர்சித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், “கொரோனா தொற்று இறுதியாக நாட்டின் திரைச்சீலையைக் கிழித்துவிட்டது. பெரும்பாலான தலைவர்களும் அதிகாரிகளும் தாங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நாட்டுத் தலைமையிடம் இருக்கும் தோல்விகளை இந்தப் பெரும் தொற்று காட்டிவிட்டது. யாரும் தாங்கள் பொறுப்பேற்பது போல் நடிப்பதும் இல்லை” எனக் கடுமையாகப் பேசியுள்ளார். ஆனால் எவரின் பெயரையும் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

`உங்கள் நடவடிக்கைக்கு நாங்கள் பரவாயில்லை!’ - ஒபாமா விமர்சனத்துக்கு ட்ரம்ப் பதிலடி

மேலும் அவர், அமெரிக்காவின் சுகாதார நெருக்கடி இன சமத்துவமின்மையை எவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். “இது போன்ற ஒரு நோய் இந்த நாட்டில் கறுப்பின சமூகங்கள் தங்கள் வாழ்வில் சமாளிக்கும் அடிப்படை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கூடுதல் சுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு