Published:Updated:

`உங்களின் செயல் பெரும் மாற்றத்துக்கான உத்வேகம்!’ - போராட்டக்காரர்களுக்கு ஒபாமாவின் மெசேஜ்

ஒபாமா
ஒபாமா ( AP )

அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அதிபர் ஒபாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த வாரம் போலீஸ் பிடியில் இறந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் அனைத்து நகரங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக நடக்கும் போராட்டத்துக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தும் போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்களுக்குத் தன் செய்தியை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

அதில் பேசியுள்ள ஒபாமா, ``உங்களுக்குச் சேவை செய்து பாதுகாக்க வேண்டியவர்களாலேயே பெரும்பாலும் வன்முறைகள் வந்துகொண்டிருகின்றன. நீங்கள் மிக முக்கியமானவர்கள், உங்கள் வாழ்க்கை முக்கியமானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்கள் கனவுகள் முக்கியம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள்தான் அதிகமாகக் கலந்துகொண்டுள்ளனர். அவர்களின் செயல்பாடு பெரிய மாற்றத்துக்கு உத்வேகமாக அமையும். அமெரிக்கா, தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகளில் சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

ஒபாமா
ஒபாமா

கடந்த வாரம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள் நம் நாட்டில் நடந்தன. பலரது மனங்களில் மாற்றம் வந்துள்ளது. அமெரிக்கா ஒரு சமூகமாக ஒரே நாடாக உருவாக இதைப் பயன்படுத்துவோம். இந்தச் சூழல் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டில் உள்ள அனைத்து மேயர்களும் அதிகாரங்கள் தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு