ஜப்பானிய மக்களைப் பார்த்தால், அவர்களின் இளமையான தோற்றம் மற்றும் ஆரோக்கியமான உடல், அவர்களது புதுமையான கண்டுபிடிப்புக்கள், அந்த மக்களின் சுறுசுறுப்பு என சில விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.
அதுமட்டுமன்றி, உலகிலேயே நீண்ட நாள்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றால் அது ஜப்பானியர்கள் தான். இந்த மக்களுக்காக பிளைவுட் சப்ளை நிறுவனமான கோயோஜு (koyoju) நிறுவனமும், இடோகி(itoki) என்ற பர்னிச்சர் கடையும் சேர்ந்து நேப் பாக்ஸ் (Nap box) என்ற ஒரு சாதனத்தைத் தயாரித்திருக்கின்றன. இதனுடைய ஸ்பெஷல் என்னன்னா, ஒருவர் நின்றபடியே தூங்கிக்கொள்ளலாம். எதற்கு அந்த நிறுவனம் இப்படி ஒரு கண்டுப்பிடிப்பைக் கண்டுபிடித்திருக்கிறது என்றால், பணி நேரத்தின்போது மனிதர்களுக்கு அவ்வப்போது தூக்கம் வருவது என்பது இயல்பான ஒன்றுதான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால் சிலர் அந்தத் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். கடுமையான வேலைப்பளுவுக்கு இடையே ஒரு நபர் சரியாக 22 நிமிடங்கள் தூங்கினால், அதன் பின்னர் அவர் செய்யக்கூடிய வேலையில் ஆற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் பணியாளர்கள், பணி நேரத்தில் தூக்கம் வந்தால் நின்றுகொண்டே தூங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த நேப் பாக்ஸ்.
இதுதொடர்பாக இடோகி நிறுவனத்தின் இயக்குநர் சீகோ கவாஷிமா பேசுகையில் (Seiko Kawashima) "ஜப்பானில் நீண்ட நேரம் பணிபுரியும் பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் அவ்வப்போது கழிவறைகளில் குட்டித் தூக்கம் போட்டுவிட்டுத் திரும்பும் பழக்கம் உண்டு. அது ஆரோக்கியமானது அல்ல என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலாகத்தான் இந்த நேப் பாக்ஸைக் கண்டுபிடித்திருக்கிறோம். இதனை ஊழியர்கள் சௌகரியமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது ஜப்பானியர்களால் நிச்சயம் வரவேற்கப்படும். அதுபோல் நிறுவனங்களும் இதனை வாங்கி தங்கள் ஊழியர்களின் பயன்பாட்டுக்குத் தருவர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். அந்த நேப் பாக்ஸ்க்குள் ஒருவரின் தலை, முழங்கால்கள் மற்றும் முதுகு ஆகியவற்றை சௌகரியமாக வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பதற்கும், அந்த நபர் கீழே விழாமல் இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.