Published:Updated:

``என் மகனின் குழந்தைத்தனத்தைக் காணவில்லை; ஆயுதம் ஏந்த ஆசைப்படுகிறான்”- உக்ரைன் அதிபரின்‌ மனைவி ஒலினா

ஒலினா ஜெலென்ஸ்கா ( SAUL LOEB )

``ஒரு விளையாட்டு சங்கத்தில்கூட உறுப்பினராக இருந்தான். ஆனால் தற்போது அவன் சண்டைப்பயிற்சிக்குச் செல்வதிலும், துப்பாக்கி சுட கற்றுக்கொள்வதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறான்.” - ஒலினா

``என் மகனின் குழந்தைத்தனத்தைக் காணவில்லை; ஆயுதம் ஏந்த ஆசைப்படுகிறான்”- உக்ரைன் அதிபரின்‌ மனைவி ஒலினா

``ஒரு விளையாட்டு சங்கத்தில்கூட உறுப்பினராக இருந்தான். ஆனால் தற்போது அவன் சண்டைப்பயிற்சிக்குச் செல்வதிலும், துப்பாக்கி சுட கற்றுக்கொள்வதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறான்.” - ஒலினா

Published:Updated:
ஒலினா ஜெலென்ஸ்கா ( SAUL LOEB )

உக்ரைனின் முதன்மைக் குடிமகளான (First Lady) உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலினா ஜெலென்ஸ்கா (Olena Zelenska), சமீபத்தில் அமெரிக்க நாட்டின் உயரதிகாரிகளைச் சந்தித்து, ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரஷ்யாவின் தாக்குதலை, கடந்த ஐந்து மாதங்களாக உக்ரைன் சந்தித்துவருகிறது. உக்ரைனிலிருந்து இந்தத் தாக்குதல்களை ச்சமாளித்துவரும் அதிபர் ஜெலன்ஸ்கியின் சார்பில் அவருடைய மனைவி அமெரிக்கா சென்றிருக்கிறார்.

 ரஷ்யா, உக்ரைன் போர்
ரஷ்யா, உக்ரைன் போர்

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனைச் சந்தித்ததோடு, மேலும் பல அதிகாரிகளையும் சந்தித்தார் ஒலினா. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில், ஒலினா, போரால் உக்ரைன் நாட்டுச் சிறுவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து, குறிப்பாக தன்னுடைய மகன் குறித்துக் கூறியிருக்கிறார். ``இந்தப் போர் என்னுடைய மகனுக்குள் ஒரு போர்வீரனாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டது. என்னுடைய ஒன்பது வயது மகன் கலைகள், விளையாட்டு போன்றவற்றில் ஆர்வத்தை விட்டுவிட்டு போரில் மட்டுமே குறியாக இருக்கிறான். போர் ஏற்படுவதற்கு முன்பு அவன் நடனப் பயிற்சிக்குச் சென்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவனுக்கு பியானோ வாசிக்கத் தெரியும்; ஆங்கிலம் கற்றுக்கொண்டான். ஒரு விளையாட்டு சங்கத்தில்கூட உறுப்பினராக இருந்தான். ஆனால் தற்போது அவன் சண்டைப் பயிற்சிக்குச் செல்வதிலும், துப்பாக்கி சுடக் கற்றுக்கொள்வதிலும் மட்டுமே ஆர்வமாக இருக்கிறான். இதுபோல போரின் தாக்கத்தால் தொலைந்த அவனுடைய குழந்தைத்தனத்தை அவனுக்கு மீண்டும் கொடுக்கவும், அவன் வாழ்வை அவன் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வழிவகுக்க விரும்புகிறேன்" என்றார்.

``என் மகனின் குழந்தைத்தனத்தைக் காணவில்லை; ஆயுதம் ஏந்த ஆசைப்படுகிறான்”- உக்ரைன் அதிபரின்‌ மனைவி ஒலினா

இதுவரையில் பல அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த ஒலினா ஜெலென்ஸ்கா, அமெரிக்காவின் நீதித்துறையிடம் உக்ரைனுக்கு இன்னும் அதிக ஆயுதங்களை வழங்கி உதவ உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். அமெரிக்க காங்கிரஸில் நீதித்துறை அதிகாரிகள் முன்பு பேசிய ஒலினா, ரஷ்யாவின் போர்வெறியில் உக்ரைனைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வான்வழித் தாக்குதலை சமாளிக்க போதிய ஆயுதங்களை வழங்கி உதவ வேண்டினார்.

``நான் இதுவரை கேட்காத ஒன்றை இப்போது கேட்கிறேன். நான் ஆயுதங்களைக் கேட்கிறேன். ஆயுதங்களை வைத்து போரிட்டு அடுத்த நாட்டை வெற்றிகொள்வதற்காக அல்ல, எங்களுடைய சொந்தத் தாய் மண்ணைக் காப்பாற்றிகொள்வதற்காகக் கேட்கிறேன். வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ள போதிய ஆயுதங்களைக் கேட்கிறேன். அதன் மூலம் ரஷ்யாவின் ராக்கெட்டுகள் எங்கள் குழந்தைகளைக் கொல்வதையும், குழந்தைகளின் வீடு மற்றும் அவர்களின் குடும்பத்தை அழிப்பதையும் தடுக்க முடியும்" எனக் கூறினார்.