Published:Updated:

கொரோனா : `மூன்றில் ஒரு பங்கு உருமாற்றம் அடைந்துள்ளது’ - உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

மூன்றில் ஒரு பங்கு கொரோனா வைரஸ் உருவிலும் தன்மையிலும் மாற்றமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இன்னும் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா தொடர்பான அப்டேட்டுகளையும் உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது பல்வேறு தகவல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளதாக WHO-வின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா
Pixabay

உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன், ராயட்டர்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர், ``உலக சுகாதார நிறுவனம் இதுவரையில் 60,000 கொரோனா மாதிரிகளைச் சேகரித்துள்ளது. அவற்றில் நடத்தப்பட்ட சோதனையில் 30% மாதிரிகளில் வைரஸின் மரபணு உருமாற்றமடைந்துள்ளது. அவை உருவத்திலும் தன்மையிலும் மாற்றமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உருமாற்றம் கொடிய நோயை உருவாக்காது.

`அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் எங்களிடம் இல்லை’ - உலக சுகாதார அமைப்பு #Corona

D614G என்ற புதிய கொரோனா வைரஸின் மரபணு மாற்றத்துக்கு செல்களைத் தொற்றும் திறன் அதிகமாக உள்ளது. இதன் மூலம் வடக்கு இத்தாலி மற்றும் நியூயார்க்கில் நோய் தொற்றின் வெடிப்பு மிக அதிகமாக இருந்தது ஏன் என்பதை விளக்க முடியும். இவை ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

சௌமியா சுவாமிநாதன்
சௌமியா சுவாமிநாதன்

உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொற்றுக்கான தொழில்நுட்ப முன்னணி தலைவர் மரியா வான் கொர்கோவ், நேற்று நடந்த மாநாட்டில் பேசும்போது, ``கொரோனா வைரஸின் உருமாற்றம் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டு அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெருமளவு பரவி வந்தது. ஆனால், இந்த உருமாற்றம் கடுமையான நோய்க்கு வழி வகுக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

`கொரோனா பரவல் முடிவு நிலைக்கு அருகில்கூட நெருங்கவில்லை!' - உலக சுகாதார நிறுவனம்
அடுத்த கட்டுரைக்கு