Published:Updated:

பாகிஸ்தான்: கடத்தல் முயற்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இந்து சிறுமி!

மரணம்

பாகிஸ்தானில் இந்து சிறுமி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான்: கடத்தல் முயற்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இந்து சிறுமி!

பாகிஸ்தானில் இந்து சிறுமி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மரணம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்கூர் நகரில் ரோஹி பகுதியில், 18 வயது சிறுமி ஒருவர் வசித்துவந்தார். அந்தச் சிறுமி இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் அந்தச் சிறுமியை மர்மக் கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் செல்ல முயன்றிருக்கிறது. மேலும், கடத்தல் கும்பலிலிருந்த நபர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமியைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்குச் சிறுமி எதிர்ப்பு தெரிவித்து, தப்பிக்க முயன்றிருக்கிறார். கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்ததால் கோபமடைந்த அந்த மர்மக் கும்பல் நடுத்தெருவில் அந்தச் சிறுமியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

சுட்டுக்கொலை!
சுட்டுக்கொலை!
கோப்புப் படம்

``பாகிஸ்தானில் இந்து சிறுமிகளைக் கடத்தி மதமாற்றம் செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இது மாதிரி ஆண்டுதோறும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர்" என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டிவருகின்றன. மேலும், ``பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்களைத் தடுக்க பாகிஸ்தான் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்திவருகின்றன.

பாகிஸ்தானில் உள்ள இந்து சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 1.6 சதவிகிதமும் என்றும், சிந்து மாகாணத்தில் மட்டும் 6.51 சதவிகிதம் என்று பாகிஸ்தான் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism