மனிதாபிமான அடிப்படையில் கடந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தானுக்கு, கோதுமையை அனுப்பி வருகிறது இந்தியா. இதன்படி, இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வழியாக 50,000 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியா அனுப்பிய கோதுமையின் தரம் நன்றாக இருப்பதாகவும், பாகிஸ்தான் வழங்கிய கோதுமை தரமானதாக இல்லை எனவும் தாலிபன் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்திருக்கும் வீடியோ அங்கு சர்ச்சையாகியிருக்கிறது.
அந்தக் காணொளியில், ``ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கும் கோதுமை வெவ்வேறு தரத்தில் உள்ளன. பாகிஸ்தான் அனுப்பியிருக்கும் கோதுமை சுத்தமின்றியும் பூச்சிகள் அரித்தும், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. ஆனால், இந்தியாவிலிருந்து வந்த கோதுமை நல்ல தரத்தில் இருந்தது" என முன்னாள் தாலிபன் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படி தாலிபன் அதிகாரி பாகிஸ்தானை விமர்சிக்கும் இந்த காணொளியை, ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

``ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் இந்தியாவுக்கு நன்றி. நமது நட்புறவு என்றென்றும் தொடரும். ஜெய் ஹிந்த்" என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிகாரி ஹம்துல்லா அர்பாப் ட்வீட்டும் செய்துள்ளார்.
தற்போது, பாகிஸ்தானை வெளிப்படையாக விமர்சித்திருக்கும் இந்த அதிகாரி, தன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.