Published:Updated:

`கழுத்து, கைகளில் கேபிள் ஒயர் தடம், இது கொலைதான்!' - அதிர்ச்சியளித்த பாக்,. மருத்துவ மாணவி மரணம்

பாகிஸ்தானில் மருத்துவ மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Namrita
Namrita ( Twitter/ @debasish_sinha )

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி (Ghotki) பகுதியைச் சேர்ந்தவர் நம்ரிதா சந்தானி. லர்கானாவில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த இவர், நேற்று கல்லூரியில் உள்ள விடுதி அறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

Suicide
Suicide

நம்ரிதாவின் நண்பர்கள் நீண்டநேரமாக அவரின் அறைக் கதவைத் தட்டியுள்ளனர். எதற்கும் பதில் அளிக்காததால் சந்தேகப்பட்டு விடுதி காவலரிடம் தெரிவித்துள்ளனர். அவர் வந்து கதவை உடைத்துப் பார்க்கும்போது கழுத்தில் துப்பட்டாவைச் சுற்றியபடி இறந்தநிலையில் கிடந்துள்ளார் நம்ரிதா. இதையடுத்து விடுதி காப்பாளர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், மாணவியின் உடலைப் பார்த்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

நேரத்தோடு வந்தார்; வகுப்பறையில் தூக்கில் தொங்கினார்! - சக மாணவிகளை பதறவைத்த தோழியின் தற்கொலை

ஆனால், இதை ஏற்க மறுத்த மாணவியின் குடும்பத்தார், `நம்ரிதா தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை அவர் நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இது தொடர்பாகப் பேசியுள்ள நம்ரிதாவின் சகோதரர் விஷால், “ நான் மருத்துவ ஆலோசகராக உள்ளேன். நம்ரிதா இறந்தபிறகு அவளது உடலை நான் ஆய்வு செய்தேன். தற்கொலை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால் நம்ரிதா கழுத்தில் உள்ள தடயம் வேறு மாதிரியாக உள்ளது.

Namrita
Namrita
Twitter/ @debasish_sinha

`அவள் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாள்' எனப் பலரும் கூறுகிறார்கள். ஆனால், அவள் கழுத்தில் கேபிள் ஒயரின் தடத்தை நான் பார்த்தேன். அதே போன்ற தடம் அவள் கைகளிலும் உள்ளது. எனவே, நம்ரிதா நிச்சயம் கொலைதான் செய்யப்பட்டுள்ளார். நம்ரிதா மிகவும் தைரியமான, திறமையான பெண். இதுபோன்ற கோழையான முடிவுகளை அவர் எடுக்கமாட்டார். இதைத் தற்கொலை வழக்காக விசாரிக்காமல் கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து பேசிய காவலர்கள், ``நம்ரிதாவின் கழுத்தில் துணி சுற்றியிருந்தது. அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என இப்போது கூற முடியாது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே எதையும் உறுதியாகக் கூற முடியும்” எனத் தெரிவித்துள்ளனர்.

`நம்ரிதாவுக்கு நீதி வேண்டும்' என்ற ஹேஸ்டேக் நேற்று முதல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர் இறந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும் மாணவியின் உடலைக் கட்டித் தழுவி அவரது குடும்பத்தினர் கதறுகின்ற வீடியோவும் வேதனையை அதிகப்படுத்தியுள்ளது.

Namrita’ Brother
Namrita’ Brother
ANI

சமீபத்தில், பாகிஸ்தானின் கோட்கிப் பகுதியில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர் இஸ்லாம் மதத்தைப் பற்றித் தவறாகப் பேசியதால் அவரின் வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள கோயில்கள் சூறையாடப்பட்டன. நம்ரிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த இந்துப் பெண் என்பதால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், நம்ரிதா சிறுபான்மை சமூகத்தவர் என்பதால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவியின் இறப்பு விவகாரம் பாகிஸ்தானில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பல இடங்களில் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.