Published:Updated:

பாகிஸ்தான்: புது பாஸ்போர்ட்... லண்டனிலிருந்து நாடு திரும்புகிறாரா முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்?!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவதற்கு, தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிய பாஸ்போர்ட் வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த பல வாரங்களாக நிலவிவந்த குழப்பங்களுக்கிடையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம், இம்ரான் கான் அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ன் சகோதரருமான நவாஸ் ஷெரீப், லண்டனிலிருந்து நாடு திரும்புவதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்  ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் முந்தைய இம்ரான் கான் அரசால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நவாஸ் ஷெரீப், லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் கடந்த 2019-ல் வெளிநாட்டு சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்தார். லண்டன் சென்ற பிறகு நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் காலாவதியானதையடுத்து, அவரின் பாஸ்போர்ட்டை அப்போதைய இம்ரான் கான் அரசு புதுப்பிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நவாஸ் ஷெரீப் லண்டனைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

இந்த நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கி, லண்டனிலிருந்து நாடு திரும்ப வழிவகை செய்திருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மேலும், பாகிஸ்தான் தூதரகம் `பாஸ்போர்ட் நவாஸ் ஷெரீப்பின் உரிமை!' என்றும், `விரைவில் அவருக்கு அது வழங்கப்படும்' என்றும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஈத் உல்-பித்ருக்குப் பிறகு நவாஸ் ஷெரீப் நாடு திரும்பலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism