Published:Updated:

ஹோம்வொர்க் செய்ய அடம்பிடித்த மகன்... ஆத்திரத்தில் தந்தை செய்த வெறிச்செயல்! - அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

ஹோம்வொர்க் சரியாக செய்யாததால் ஆத்திரமடைந்த தந்தை நசீர், சிறுவன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கிறார்.

ஹோம்வொர்க் செய்ய அடம்பிடித்த மகன்... ஆத்திரத்தில் தந்தை செய்த வெறிச்செயல்! - அதிர்ச்சி சம்பவம்

ஹோம்வொர்க் சரியாக செய்யாததால் ஆத்திரமடைந்த தந்தை நசீர், சிறுவன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கிறார்.

Published:Updated:
அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நசீர். நசீரின் மகன் பெயர் ஷாஹீர். 12 வயதான ஷாஹீர் பள்ளியில் படித்து வந்திருக்கிறார். சிறுவன் ஷாஹீர் பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை சரிவர செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவரின் தந்தை நசீர் அவரைக் கண்டித்திருக்கிறார்.

ஆனால், சிறுவன் தொடர்ந்து அசட்டையாக இருந்து வந்திருக்கிறான். இந்த நிலையில், ஆத்திரமடைந்த தந்தை நசீர், சிறுவன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில் சிறுவன் இறந்துவிட்டான். இந்த விஷயம் சிறுவனின் தாய்க்கு தெரியவர, உடனடியாக அவர் தன் கணவர்மீது போலீஸில் புகாரளித்தார். நசீர்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

போலீஸார் விசாரணையில் நசீர், ``நான் என்னுடைய மகனை கொல்ல விரும்பவில்லை. என் மகன் பள்ளிக்குச் செல்லும்போது சரியாக ஹோம்ஒர்க் செய்யவில்லை. இதனால் அவனை பயமுறுத்துவதற்காக மண்ணெண்ணெய்யை அவன்மீது தெளித்து தீக்குச்சியைக் கொளுத்தினேன். அப்போது எதிர்பாராத விதமாக அவன்மீது தீப்பிடித்துவிட்டது. இதனால் அவன் உடல் கருகி உயிரிழந்தான்'' எனக் கூறியிருக்கிறார்.