Published:Updated:

உக்ரைன் - ரஷ்யா போர்: பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் தப்ப உதவிய இந்திய தேசியக்கொடி!

பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள்

உக்ரைனில் சிக்கித் தவித்த பாகிஸ்தான், துருக்கி மாணவர்களுக்கு எல்லையைக் கடக்க இந்தியக் கொடி உதவியதாக அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா 7-வது நாளாகத் தாக்குதல் நடத்திவருகிறது. இதைக் கண்டித்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்குத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றன. ரஷ்யாவின் படைகள் உக்ரைன் தலைநகரான கீவ்-வைக் கடுமையாகத் தாக்கிவருகின்றன. இதனால் கீவ் நகரில் தங்கியிருக்கும் மக்கள் அண்டை நாடுகளுக்குக் குடிபெயர ஆரம்பித்துள்ளனர்.

உக்ரைனின் அண்டை நாடுகளிடம் இந்திய அரசு, இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் விசா கேட்கக் கூடாது போன்ற பல்வேறு விலக்குகளைக் கேட்டிருந்தது. இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். `ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். இதனால் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியக்கொடியை ஏந்தியபடி அண்டை நாடுகளுக்கு வெளியேறிவருகின்றனர். அவர்களால் அந்த எல்லைகளை எளிதாகக் கடக்கவும் முடிகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்:  பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் தப்ப உதவிய இந்திய தேசியக்கொடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைனில் இதேபோல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் சிக்கித் தவித்து வரும் நிலையில், பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் இருவர் தாங்கள் தங்கியிருந்த வீடுகளில் உள்ள திரைச்சீலையை எடுத்து அதன்மீது, இந்தியக் கொடி வண்ணத்தை வரைந்து, இந்தியர்கள் உதவியுடன் கொடியைப் பிடித்துக்கொண்டு ருமேனியா வழியாக புக்கரெஸ்ட் வந்தடைந்தனர். இந்தியக்கொடியும், இந்தியர்களும் தங்களுக்கு எளிதாக எல்லையைக் கடக்கப் பெரிய அளவில் உதவியதாகத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism