Published:Updated:

`செங்குத்தான பாறை... 820 அடி உயரம்! - 8 மணிநேரமாகப் போராடிய ஸ்கை டைவிங் வீரரின் `திகில்' அனுபவம்

தாய்லாந்தில் செங்குத்தான பாறை ஒன்றில் 820 அடி உயரத்தில் பாராசூட்டுடன் சிக்கிக்கொண்ட வீரர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்கை டைவர்
ஸ்கை டைவர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குழு ஸ்கை டைவிங் நிகழ்ச்சிக்காகத் தாய்லாந்து வந்துள்ளது. சனிக்கிழமை நடந்த தேசிய குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஜோகன்ஸ் கிராசர் என்ற பாராசூட் வீரர் தன் காதலியுடன் பட்டாலுங் மாகாணத்தில் உள்ள Khao Ok Talu என்ற மலைக்குச் சென்றுள்ளார்.

ஸ்கை டைவர்
ஸ்கை டைவர்
Phatthalung Rescue

அந்த மலையில் இருந்து பாராசூட்டில் குதித்தபோது காற்றின் வேகம் காரணமாக ஜோகன்ஸ் கட்டுப்பாட்டை இழந்தார். செங்குத்தான பாறையின் மீது பாராசூட் சிக்கிக்கொண்டது. தரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலையில் அந்தரத்தில் சிக்கிக்கொண்டார். அது செங்குத்தான பாறை என்பதால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. பாறையில் சிக்கிய பாராசூட் எவ்வளவு நேரம் தன்னை தாங்கி நிற்கும் என்று ஜோகன்ஸூக்குத் தெரியவில்லை. தரையிலிருந்து சுமார் 820 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட ஜோகன்ஸ் உதவிக்காக கூச்சலிட்டுள்ளார்.

`நம்பர் 4’ நான் பார்த்துக்குறேன்! -   ஆஸ்திரேலியா தொடருக்கு கோலியின் புது பிளான்

ஜோகன்ஸ் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப்படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீட்புப்படை, மருத்துவக்குழு ஆகியவை அந்தப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. இதற்கிடையில் ஜோகன்ஸ் காதலி அவர் சிக்கியிருந்த பாறைக்கு அருகில் இருந்த மற்றொரு மலைப்பகுதியில் கயிற்றின் உதவியுடன் இறங்கினார். அவர் ஜோகன்ஸூக்கு தைரியம் கொடுத்துக்கொண்டிருந்தார். பாறையில் மோதியதால் ஜோகன்ஸின் வலதுகாலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவருக்கு உடனடியாக மருத்துவ உதவியும் தேவைப்பட்டது.

தாய்லாந்து மீட்புப்படையினர்
தாய்லாந்து மீட்புப்படையினர்
Phatthalung Rescue

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். பாறையில் சிக்கிக்கொண்ட ஜோகன்ஸை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்தப் பணியில் 43 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் காற்று அதிவேகமாக வீசியதால் ஹெலிகாப்டரைக் கொண்டு மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து கயிறு மூலம் ஜோகன்ஸை பத்திரமாகக் கீழே இறக்க முடிவு செய்தனர். இதுகுறித்த தகவல் அவரின் காதலி மூலம் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண் பாறையின் மீது இருந்து தொடர்ந்து தைரியம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை உடனடியாக மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஸ்கை டைவர்
ஸ்கை டைவர்
Phatthalung Rescue

நல்ல உடல்நிலையில் இருக்கும்போதே அவரை மீட்க வேண்டும் இல்லையென்றால் சிக்கலாகிவிடும் என்பதால் மீட்புப்படையினர் துரிதமாகச் செயல்பட்டனர். கயிறு மூலம் அவர் இருந்த இடத்துக்கு மீட்புப்படை வீரர்கள் சென்றனர். இதையடுத்து அவர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். தயாராக இருந்த மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். அதன்பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் 8 மணிநேரம் நடந்த மீட்புப்பணி வெற்றிகரமாக முடிந்தது.