Published:Updated:

`ஹே அலெக்ஸா...’ - தன் பெயரால் சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல்... பெயரை மாற்ற நீதிமன்றம் அனுமதி!

சிறுமி

ஜெர்மனியில் பெண் ஒருவர் தன் மகளின் பெயரை மாற்ற விண்ணப்பித்திருக்கிறார். ஏன்... என்ன நடந்தது?!

`ஹே அலெக்ஸா...’ - தன் பெயரால் சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல்... பெயரை மாற்ற நீதிமன்றம் அனுமதி!

ஜெர்மனியில் பெண் ஒருவர் தன் மகளின் பெயரை மாற்ற விண்ணப்பித்திருக்கிறார். ஏன்... என்ன நடந்தது?!

Published:Updated:
சிறுமி

அமேசான் நிறுவனம், `அலெக்ஸா’ என்னும் சாதனத்தை அறிமுகம் செய்தது. அது குரல் கட்டளைக்கு ஏற்ப தகவல்களை வழங்கும் சாதனமாக அறியப்படுகிறது. இந்த நிலையில், ஜெர்மனியில் உள்ள ஒரு தம்பதியர் அமேசான் நிறுவனம் `அலெக்ஸா’ எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தும் முன்பே தன் மகளுக்கு `அலெக்ஸா’ எனும் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். தற்போது அந்த அலெக்ஸா இணைய சாதனம் அதிகம் பேரால் பயன்படுத்தப்படுகிறது. அதனால், தற்போது 6 வயது சிறுமி பிறரால் கேலிக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.

சிறுமி
சிறுமி
சித்திரிப்பு படம்

அந்தச் சிறுமியின் பள்ளி மட்டுமல்லாமல், செல்லும் இடங்களிலெல்லாம் 'ஹே அலெக்ஸா பாட்டுப் பாடு.... அலெக்ஸா நடனமாடு..." எனக் கிண்டல் செய்யப்படுவதால் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக பெற்றோர் கூறுகிறார்கள். அதனால் சிறுமியின் பெயரை மாற்ற பெற்றோர் முடிவு செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் கோட்டிங்ஹனில் உள்ள நகர அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

அலெக்ஸா
அலெக்ஸா

இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம், "சிறுமிக்கு இந்தப் பெயரால் ஏற்பட்ட கேலி, உணர்வுரீதியாக பெரும் சுமையான நிகழ்வு" என ஒப்புக்கொண்டது. மேலும், சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு ஒரு புதிய பெயரைத் தேர்வு செய்ய அனுமதித்திருக்கிறது. இருப்பினும், சிறுமியின் புதிய பெயர் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை!