Published:Updated:

நடுவானில் ஜன்னலை எட்டி உதைத்து, விமானியுடன் மோதல்... இளைஞரை இருக்கையில் கட்டிவைத்த ஊழியர்கள்!

நடுவானில் ஜன்னலை எட்டி உதைத்த இளைஞர் ( ட்விட்டர் )

இளைஞர் ஒருவர் நடுவானில் விமானத்தின் ஜன்னலை உதைத்தும், விமானியுடன் மோதலிலும் ஈடுபட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரிலிருந்து துபாய் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, திடீரென பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த இளைஞர் தனது கைகளால் இருக்கைகளைக் குத்தியும், விமானத்தின் ஜன்னலை உதைத்தும், விமான ஊழியர்களுடன் சண்டையில் ஈடுபட்டதாலும் நடுவிமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், இருக்கைகளின் நடுவில் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புறப்படுத்துக்கொண்டார். இதையடுத்து, விமான ஊழியர்களுடன் சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான சட்டத்தின்படி, பயணி தனது இருக்கையில் கட்டிவைக்கப்பட்டார்.

விமானி உடனடியாக துபாயிலுள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறி பாதுகாப்பு கோரியிருக்கிறார். விமானம் துபாயில் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் பயணியை கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் அவரை பிளாக் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது. மேலும், அவர் அந்த விமானத்தில் பயணிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.