Published:Updated:

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; பிளாஸ்டிக் பைகளில் கேஸ் விற்பனை! இது ஆபத்தானதா?

பிளாஸ்டிக் பைகளில்  கேஸ்
News
பிளாஸ்டிக் பைகளில் கேஸ்

பாகிஸ்தான் மக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; பிளாஸ்டிக் பைகளில் கேஸ் விற்பனை! இது ஆபத்தானதா?

பாகிஸ்தான் மக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
பிளாஸ்டிக் பைகளில்  கேஸ்
News
பிளாஸ்டிக் பைகளில் கேஸ்

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அங்குச் சமையல் எரிவாயு பற்றாக்குறையும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சமையல்  எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பிச் சேகரித்துப் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கைபர் பக்துன்வா என்ற பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள்  பிளாஸ்டிக் பைகளில் எரிவாயுவை நிரப்பி வாங்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பைகளில்  கேஸ்
பிளாஸ்டிக் பைகளில் கேஸ்

பிளாஸ்டிக் பைகளில் 3 அல்லது 4 கிலோ சமையல் எரிவாயுவை நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது என்றும் எரிவாயு நிரப்பிய பைகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொடுக்கிறார்கள் என்றும் அந்நாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. வாங்கிச் சென்ற எரிவாயுப் பைகளில் சிறிய குழாயைப் பொருத்திப் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இப்படி எரிவாயுவை மக்கள் பிளாஸ்டிக் பையில் நிரப்பி எடுத்துச் சென்று பயன்படுத்தும்போது சிறு தவறு நடந்தாலும் அது பெரிய விபத்தில் முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் பாகிஸ்தான் அரசை விமர்சித்தும் வருகின்றனர்.