Published:Updated:

ராணியின் மனங்கவர்ந்த `புத்திசாலி’.. துரத்தும் கனேடிய சர்ச்சை.. அரசக் குடும்பத்தில் அடுத்த பிரிவு!

ராணி எலிசபெத் - ஆட்டம் கெல்லி
ராணி எலிசபெத் - ஆட்டம் கெல்லி ( twitter )

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு சில வாரங்களே கடந்துள்ள நிலையில், இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் மற்றுமொரு பிரிவு நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சமீபத்தில் அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் அவருடைய பேரனும் இளவரசருமான ஹாரியும் அவரின் மனைவி மேகனும், அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது. ``சுதந்திரமாக இருக்க நினைக்கிறோம்" என்று இருவரும் கூறியதற்கு ராணி எலிசபெத் ஒருவழியாக சம்மதித்தாலும் இதில் அவருக்கு முழு ஈடுபாடு இல்லை என்றே இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

பீட்டர் பிலிப்ஸ் - ஆட்டம் கெல்லி
பீட்டர் பிலிப்ஸ் - ஆட்டம் கெல்லி
twitter

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு சில வாரங்களே கடந்துள்ள நிலையில், இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் மற்றுமொரு பிரிவு நிகழ்ந்துள்ளது. இந்தமுறை அதைச் செய்திருப்பது ராணி எலிசபெத்தின் மகள் வழி பேரன் பீட்டர் பிலிப்ஸ். ராணி எலிசபெத்தின் பாச மகளான அன்னேவின் ஒரே மகன்தான் இந்த பீட்டர் பிலிப்ஸ்.

சுதந்திரம் தேடி! - அரச குடும்பத்தைத் துறந்த ஹாரி... அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணி

இவர் ஆட்டம் கெல்லி என்ற பெண்ணைக் காதலித்து கடந்த 2008-ம் ஆண்டு கரம்பிடித்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு மகிழ்ச்சியாகச் சென்ற இவர்கள் வாழ்க்கையில்தான் இப்போது பிரிவு ஏற்பட்டுள்ளது. ஆம்... இருவரும் விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். 12 ஆண்டுக்கால திருமண பந்தத்தில் இருந்து விலகும் இந்த முடிவை இவர்கள் இருவரும் ஒருமனதாக எடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக அரசக் குடும்பத்துக்குத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தங்கள் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு இருவரும் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பீட்டர் பிலிப்ஸ் - ஆட்டம் கெல்லி
பீட்டர் பிலிப்ஸ் - ஆட்டம் கெல்லி
twitter

பீட்டரும், ஆட்டமும் ராணி எலிசபெத்தின் பாசத்துக்குரிய நபர்கள். ராணி எங்கு சென்றாலும் அவருடன் ஆட்டமும் செல்வது வழக்கம். புத்திசாலியான அவரை ராணி எப்போதும் தன் அருகிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்வார். இதனால் இவர்களது பிரிவு ராணி எலிசபெத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் இருவரும் விவாகரத்து செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் அதற்கு செவிமடுத்துவிட்டனர். தற்போது அவர்கள் விவாகரத்து செய்ய உள்ளனர் என்று உறுதியான தகவலை அவர்களது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

`பின்தொடர்கிறார்கள்; மறைந்திருந்து புகைப்படம் எடுக்கிறார்கள்!’- எச்சரிக்கும் ஹாரி

கனேடிய சர்ச்சை!

கடந்த சில வருடங்களாகவே ஆட்டமுக்கும், பீட்டருக்கும் மனஸ்தாபம் இருந்துவந்துள்ளது. இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த பிரெய்மர் ஹைலேண்ட் விளையாட்டுப் போட்டிகளில் ராணி மற்றும் இளவரசர் சார்லஸுடன் இணைந்து பீட்டரும் ஆட்டமும் கலந்துகொண்டனர். இதுவே அவர்கள் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. அதன்பிறகு இருவரும் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும், கிறிஸ்துமஸ் போன்ற அரசக் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் ஒன்றாக கலந்துகொள்ளவில்லை.

ராணி எலிசபெத் - ஆட்டம் கெல்லி
ராணி எலிசபெத் - ஆட்டம் கெல்லி
twitter

இருந்தாலும் இருவரும் இளவரசி அன்னேவின் க்ளூசெஸ்டர்ஷைர் எஸ்டேட் வீட்டில் ஒன்றாகவே வசித்துவருகின்றனர். விவாகரத்துக்குப் பின்னர் இவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இருவரில் யாராவது ஒருவர் இளவரசி அன்னேவின் மகள் வசித்துவரும் 700 ஏக்கர் எஸ்டேட்டுக்குச் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பீட்டர் பிலிப்ஸின் நிகர சொத்து மதிப்பு 15.5 மில்லியன் டாலர் என்பதால் விவாகரத்துக்குப் பின் ஆட்டமுக்கு கணிசமான தொகை ஜீவனாம்சமாக பீட்டர் கொடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இளவரசர் ஹாரியின் மனைவி மேகனைப் போலவே கனடாவைச் சேர்ந்தவர்தான் இந்த ஆட்டம். இவர் கனேடியர் என்பதால் இவரின் குழந்தைகளுக்கும் இரட்டை குடியுரிமை உள்ளது. மேகன் கனடாவில் குடியேறிய விவகாரத்தைப் போலவே இவருக்கும் அங்கு குடியேற விருப்பம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விவகாரத்துக்குப் பின் குழந்தைகளுடன் ஆட்டம் கனடா செல்லலாம்.

`அன்று, என் அம்மா டயானாவை இழந்தேன்; இன்று என் மனைவியைக் குறிவைக்கிறார்கள்!' - இளவரசர் ஹாரி
அடுத்த கட்டுரைக்கு