Published:Updated:

கொள்ளை: இறந்துகிடந்த கொசுக்கள்; டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன்! - இது சீன போலீஸின் `அடடே' புலனாய்வு!

கொசு ( Pixabay )

இறந்த கொசுக்கள் மூலம், 19 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை போலீஸ் கைதுசெய்திருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

கொள்ளை: இறந்துகிடந்த கொசுக்கள்; டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன்! - இது சீன போலீஸின் `அடடே' புலனாய்வு!

இறந்த கொசுக்கள் மூலம், 19 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை போலீஸ் கைதுசெய்திருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
கொசு ( Pixabay )

சீனாவில், இறந்த கொசுக்கள் மூலம், 19 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை போலீஸ் கைதுசெய்திருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அதாவது, திருட்டு நடந்த வீட்டில், இறந்துகிடந்த கொசுக்களின் ரத்தக் கறைகளை சோதனைக்கு உட்படுத்தி டி.என்.ஏ மூலம் போலீஸார் திருடனைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கடந்த ஜூன் 11-ம் தேதி, சீனாவின் ஃபுஜியான் மாகாணத்திலுள்ள ஃபுஜோவில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கைது
கைது

திருடன் பல மதிப்புமிக்க பொருள்களை அந்த வீட்டிலிருந்து திருடியிருக்கிறான். சமையலறையில் சில நூடுல்ஸ் மற்றும் முட்டை ஓடுகள் இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு, திருடன் அந்த வீட்டிலேயே இரவு தங்கியிருக்கிறான் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். மேலும், அந்த வீட்டில் முக்கியத் தடயங்களாக, பயன்படுத்தப்பட்ட ஒரு கொசுவத்திச்சுருள், இரண்டு இறந்த கொசுக்கள் மற்றும் சுவரில் ரத்தக் கறைகளும் இருந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொசு
கொசு

இதில் போலீஸார், ரத்த மாதிரிகளைச் சுவரிலிருந்து பிரித்தெடுத்து டி.என்.ஏ ஆய்வுக்கு அனுப்பியிருக்கின்றனர். பின்னர் கண்டறியப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் குற்றப் பின்னணிகொண்ட சாய் என்ற குடும்பப் பெயருடன் சந்தேகத்துக்கிடமானவை என்பதை உறுதிப்படுத்தி, குற்றவாளியை போலீஸார் கைதுசெய்தனர். போலீஸாரின் இந்தத் துரித நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 19 நாள்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்ட இந்தக் குற்றவாளி மேலும் மூன்று திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. இணையதளப் பயன்பாட்டாளர் ஒருவர், `இது கொசுக்களின் பழிவாங்கல் செயல். கொசுக்கள் பயனற்றவை என்று நான் நினைத்தது தவறு' என்று கருத்து பதிவிட்டிருக்கிறார்.