Published:Updated:

`கொரோனாவைவிட அரசியல் வைரஸ்தான் அதிகம் பரவியுள்ளது!’ - அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சித்த சீனா

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

அமெரிக்க அரசியல் சக்திகள் சீனாவின் உறவை ஒரு புதிய பனிப்போரின் விளிம்புக்குத் தள்ளுவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் உறுதியானது முதல் தற்போது வரை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வார்த்தைப் போர் ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கொரோனாவை சீன வைரஸ் என விமர்சித்ததில் தொடங்கி வுகானின் ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் பரவியதாகக் குற்றம்சாட்டினார் ட்ரம்ப். மேலும், அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனுபவித்து வரும் இந்த மோசமான நிலைக்கு சீனாதான் காரணம் இதற்கு அவர்கள் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனக் கூறிவருகிறார்.

சீனா - அமெரிக்கா
சீனா - அமெரிக்கா

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காதான் ராணுவ வீரர்கள் மூலம் வுகானில் கொரோனாவை பரப்பியதாகவும், அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதையும் மீறி அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இழப்பீடு கேட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனச் சீனா எச்சரித்துள்ளது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது.

`கொரோனா எங்கள் பலவீனத்தை உணர்த்திவிட்டது’ - தங்கள் பிழையை ஒப்புக்கொண்ட சீனா

இந்நிலையில், அமெரிக்காவின் அரசியல் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி. அமெரிக்கா தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்காவின் சில அரசியல் சக்திகள்தான் சீன - அமெரிக்கா உறவுகளை புதிய பனிப்போரின் விளிம்புக்குத் தள்ளுவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. கொரோனாவை வைரஸால் ஏற்பட்ட பேரழிவையும் தாண்டி அமெரிக்கா முழுவதும் கொடுமையான அரசியல் வைரஸும் பரவிவருகிறது.

வாங் யி
வாங் யி

இந்த அரசியல் வைரஸ் சீனாவைத் தாக்கவும் புண்படுத்தவும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறது. சில அமெரிக்க அரசியல்வாதிகள் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சீனாவை குறிவைத்து பல பொய் தகவல்களைக் கூறுகின்றனர். மேலும், அவர்கள் சீனாவுக்கு எதிராகப் பல சதித்திட்டங்களையும் தீட்டிவருகின்றனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளர். வாங் யி, அரசியல் சக்திகள் என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சாடியுள்ளார்.

`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்!’ - கொதித்த ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு