Published:Updated:

22 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து இறந்த பிரபல ஜப்பான் நடிகை; மரணத்தில் எழும் சந்தேகங்கள்!

Saya Kakanda
News
Saya Kakanda ( Twitter Photo: @sayakakanda )

ஜப்பானிய நடிகையும் பாடகியுமான சயாகா காண்டா விடுதியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற செய்தி பரவி வருகிறது.

ஜப்பானிய நடிகையும் பாடகியுமான சயாகா காண்டா ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள சப்போரோ என்ற பகுதியில் உள்ள விடுதியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற செய்தி பரவி வருகிறது.

Saya Kakanda
Saya Kakanda
Twitter Photo: @sayakakanda

ஜப்பானைச் சேர்ந்த சயாகா காண்டா (35), பிரபல நடிகை மற்றும் பாடகி. இவர் ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர் மஸாகி காண்டாவின் மகள். ஜப்பானின் வடக்குப் பகுதியான சப்போரா என்ற பகுதியில் உள்ள விடுதியில் சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் அவர் தங்கியிருந்த 22 மாடி விடுதியின் 14-வது மாடியில் வெளிப்புற இடத்தில் கிடந்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அன்று இரவே சயாகா காண்டா இறந்துவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனையடுத்து பலரும் அவருடைய இறப்புக்கு வருத்தங்களும், இரங்கல்களையும் தெரிவித்து வரும் நிலையில், அவர் தவறி விழுந்து உயிரிழக்கவில்லை, தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால் தற்போது வரை அவரது மரணம் தொடர்பான செய்திகளும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை.

Saya Kakanda
Saya Kakanda
Twitter Photo: @sayakakanda

முன்னதாக சப்போராவில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு வந்துள்ளார்; அவர் இறப்பதற்கு முன்தினம் வரை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவர் மரணத்துக்குப் பின்னர் அவர் அஸ்தியைப் பெற்றுக்கொண்ட அவரின் பெற்றோர், கண்ணீருடன் மீடியாவிடம் பேசினர்.

2001-ம் ஆண்டு முதல் பாடகியாக வலம் வந்த காண்டா, டிஸ்னியின் மாபெரும் அனிமேட்டட் திரைப்படமான `ஃப்ரோஸன்' என்ற படத்தின் ஜப்பானிய மொழிமாற்றப்பட்ட பதிப்பில் `அனா' என்ற காதாபாத்திரத்திற்காகக் குரல் கொடுத்ததற்காக பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டார்.