Published:Updated:

``விண்வெளியில் பார்ன் மூவி எடுக்க எலான் மஸ்க் உதவ வேண்டும்"- ஜானி சின்ஸ் வைத்த சர்ச்சையான கோரிக்கை

எலான் மஸ்க், ஜானி சின்ஸ், டாம் க்ரூஸ்

பார்ன் மூவி நடிகர் ஜானி சின்ஸ், விண்வெளியில் பார்ன் மூவி எடுப்பதற்காக எலான் மஸ்க் உதவி செய்வார் என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

``விண்வெளியில் பார்ன் மூவி எடுக்க எலான் மஸ்க் உதவ வேண்டும்"- ஜானி சின்ஸ் வைத்த சர்ச்சையான கோரிக்கை

பார்ன் மூவி நடிகர் ஜானி சின்ஸ், விண்வெளியில் பார்ன் மூவி எடுப்பதற்காக எலான் மஸ்க் உதவி செய்வார் என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
எலான் மஸ்க், ஜானி சின்ஸ், டாம் க்ரூஸ்

பார்ன் படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஜானி சின்ஸ். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், "விண்வெளியில் நடிக்கும் முதல் நடிகராக இருக்க விரும்புகிறேன். 2015 ம் ஆண்டிலிருந்து இதற்கான திட்டமிடலைச் செய்தார்கள். அன்றைக்கு இருந்த பயணிகள் விமானத்தை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், இன்று அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அப்படி எடுக்க முடிந்தால் அற்புதமாக இருக்கும். அது விரைவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்கும். எலான் மஸ்க்கும் இதற்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன். இதைச் செய்வதற்கு சரியான நபர் அவர். அதுமட்டுமில்லாமல் இது அவரின் ஸ்பைஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நல்ல விளம்பரமாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

ஜானி சின்ஸ், எலான் மஸ்க்
ஜானி சின்ஸ், எலான் மஸ்க்

இதையடுத்து, ட்விட்டரை தன் வசப்படுத்தியதிலிருந்து டாக் அஃப் தி டவுனாகி இருக்கும் எலான் மஸ்க்கை வம்புக்கிழுக்கும் வகையில் பேசியுள்ள ஜானி சின்ஸின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. மேலும், பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸை வைத்து கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் விண்வெளியில் திரைப்படம் எடுக்கப்போவதாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான 'யுனிவர்சல் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் டேம் டோன்னா லேங்க்லி கூறியிருந்தார். அப்படி நடந்தால் விண்வெளியில் நடிக்கப்போகும் முதல் நடிகராக டாம் க்ரூஸ் இருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் டாம் க்ரூஸ்க்கே டப் கொடுக்கும் வகையில் 'விண்வெளியில் நடிக்கும் முதல் நடிகராக இருக்க விரும்புகிறேன்' என்று ஜானி சின்ஸ் கூறியுள்ளதைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது.