`உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே உக்ரைன் தலைநகர் கிவ்வை-விட்டு வெளியேறுங்கள்” என அமெரிக்கா சார்பாகக் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இதை உக்ரைன் பிரதமர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. ``தாக்குதல்கள் இங்கேதான் நடைபெறுகின்றன, ஆயுதங்கள்தான் தேவை, பயணங்கள் அல்ல’’ என உக்ரைன் அதிபர் கூறியதாக அமெரிக்க உளவுப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``நான் உக்ரைன் ராணுவத்தைச் சரணடையக் கூறிவிட்டதாகச் சில வதந்திகள் பரவிவருகின்றன. உக்ரைன் தொடர்பாக ரஷ்யா வெளியிடும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம். நாங்கள் எங்கள் ஆயுதங்களைக் கீழே போடப்போவதில்லை. இது எங்கள் நாடு. நாங்கள் நாட்டை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நாட்டுக்காக, நமது குழந்தைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம்' என்றார்.
