Published:Updated:

பாகிஸ்தான்: கிரிக்கெட் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

பாகிஸ்தானில் குடும்பத்தினருடன் கிரிக்கெட் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

பாகிஸ்தான்: கிரிக்கெட் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

பாகிஸ்தானில் குடும்பத்தினருடன் கிரிக்கெட் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

Published:Updated:
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) நடைபெற்றுவருவதுபோல, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நடந்துவருகிறது. தற்போது பிஎஸ்எல் தொடரின் 7-வது சீஸன் நடந்துவருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் குடும்பத்தினருடன், லாகூரில் உள்ள கடாஃபி (Gaddafi) மைதானத்துக்கு கிரிக்கெட் பார்க்கச் சென்றுள்ளார். போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப மைதானத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் கூட்டத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.

பாகிஸ்தான் சூப்பர் லீக்
பாகிஸ்தான் சூப்பர் லீக்

இந்தச் சூழலில், அந்த இளம்பெண் வெளியில் செல்லும் வழி குறித்து மைதானத்திலிருந்த இரண்டு பாதுகாவலர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். அவர்கள் இருவரும் இந்தப் பெண்ணுக்கு உதவுவதாகக் கூறிவிட்டு மைதானம் அருகே யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். செய்வதறியாது அந்தப் பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். பெண்ணை தேடிக்கொண்டிருந்த குடும்பத்தினர், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆட்கள் வருவதைத் தெரிந்துகொண்ட பாதுகாவலர்கள் இருவரும் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்தரிப்புப் படம்

``பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் (2015-2021) 22,000-க்கும் அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன" என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism