Published:Updated:

`எந்த நாட்டையும் அச்சுறுத்த ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது!' - குவாட் மாநாட்டில் வலியுறுத்தல்

4-வது குவாட் மாநாடு ( ட்விட்டர் )

``எந்தவொரு நாட்டையும் தாக்கவோ, அச்சுறுத்தவோ ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது" என குவாட் மாநாட்டில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனர்.

`எந்த நாட்டையும் அச்சுறுத்த ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது!' - குவாட் மாநாட்டில் வலியுறுத்தல்

``எந்தவொரு நாட்டையும் தாக்கவோ, அச்சுறுத்தவோ ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது" என குவாட் மாநாட்டில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனர்.

Published:Updated:
4-வது குவாட் மாநாடு ( ட்விட்டர் )

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட 4-வது குவாட் (Quadrilateral Security Group) மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த குவாட் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரைஸ் பெய்ன் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றிருந்தார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ``4-வது குவாட் மாநாடு வெளியுறவு அமைச்சர் கூட்டம் நிறைவடைந்தது” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்திருந்தார்.

 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்

இந்தக் கூட்டத்தில், ரஷ்யா- உக்ரைன் விவகாரம், மியான்மர் பகுதியில் நிலவும் தீவிரவாதப் பதற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-மியான்மர் எல்லையில் நடக்கும் தீவிரவாதம் குறித்துப் பேசுகையில், சமீபத்தில் அங்கு இந்தியாவின் கர்னல், அவரின் குடும்பத்தினர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

பின்னர் பேச்சுவார்த்தைகளெல்லாம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ``அனைத்து நாடுகளும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக நீதியின் முன் நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

எந்தவொரு நாடும் பிற நாட்டைத் தாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது. அவர்களுக்கு நிதியளித்தல், பயிற்சியளித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது, அப்படி நிகழ்ந்தால் அது நேரடியாக இந்தோ- பசிபிக் பாதுகாப்புக்கு பாதிப்பை உண்டாக்கும்" என பாகிஸ்தானைக் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை தீவிரவாத சக்திகளுக்காகப் பயன்படுத்திவருவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது.