அமேசான் காட்டில் மரங்களை அழித்து, நாட்டின் பூர்வகுடிகளை ஒழித்து, அந்தப் பகுதியை வணிக பூமியாக மாற்றும் முயற்சியை ஏற்கெனவே முன்னெடுத்திருக்கிறது பிரேசில் அரசு. அடுத்து, நாட்டில் பரம்பரையாக வாழ்ந்துவரும் ‘குலாம்போ’ (Quilombo)இன மக்களை அழிப்பதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டது.

17-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், அமெரிக்க கண்டத்தில் அடிமை வர்த்தகம் அதிகமாக இருந்தது. அப்போது ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களில் சுமார் 95 லட்சம் பேர் பிரேசிலுக்கு அடிமைகளாக அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 40 லட்சம் பேர் பிரேசில் நாட்டின் பண்ணைகளில் வேலை செய்துவந்தனர். பிரேசிலில் 1888-ம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும், அந்த மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப் பட்டனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பண்ணைகளிலிருந்து தப்பி மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் (வடக்கு பிரேசில்) ஒளிந்து வாழத் தொடங்கினர். அவர்களின் வாரிசுகள்தான் `குலாம்போ’ என அழைக்கப்படுகின்றனர்.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, இந்த மக்களுக்கு அவர்கள் அனுபவித்த நிலங்கள்மீதான உரிமையை வழங்கியது பிரேசில் அரசு. அவர்களில் பெரும்பாலானோர் அட்லான்டிக் கரையோரம் இருக்கும் அல்கான்டராவில் வசிக்கிறார்கள். இவர்கள்தான், விவசாயத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

முன்பு வேட்டைக்காரர்கள், மரக் கடத்தல் காரர்கள், மாட்டுப்பண்ணையாளர்கள், கனிம வளங்களைச் சுரண்டுபவர்கள் போன்றோர்தான் அமேசான் காட்டை அழித்து பூர்வகுடிகளை ஒழித்தார்கள். தற்போது, குலாம்போ இன மக்களை அழிக்கக் களமிறங்கியிருப்பவை, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்.

விண்ணில் ராக்கெட்டை ஏவுவது, உலகின் 260 பில்லியன் டாலர் வர்த்தகம். ஐரோப்பிய நாடுகள்தான் இந்தத் தொழிலில் கோலோச்சி வருகின்றன. பூமத்தியரேகைக்கு 345 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கினியா தீவுகளிலிருந்துதான் பல நாடுகளின் ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. கினியா, பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அட்சரேகைக்கு அருகில் இருக்கும் கலிஃபோர்னியாவிலிருந்து அமெரிக்கா ராக்கெட்டைச் செலுத்திவருவதால், செலவு அதிகமாகிறது. அதனால், அமெரிக்காவால் ஐரோப்பிய நாடுகளோடு போட்டிபோட முடியவில்லை. எனவேதான், அல்கான்டராமீது கண்வைத்திருக்கிறது.

பூமத்தியரேகைக்கு 140 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது அல்கான்டரா. இந்தப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் இருப்பதால், இங்கிருந்து ராக்கெட்களை ஏவினால், விண்வெளியைச் சென்றடையும் நேரமும் எரிபொருள் செலவும் கணிசமாகக் குறையும். இதற்காக, கடந்த மார்ச் மாதம் பிரேசிலுடன் ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளது அமெரிக்கா.

1980-ம் ஆண்டு பிரேசில் அரசு அல்கான்டரா வில் ஏற்கெனவே ஒரு சிறிய ராக்கெட் ஏவுதளம் அமைத்தபோதே நூற்றுக்கணக்கான குலாம்போ மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் விரட்டப்பட்டனர். அந்த ஏவுதளத்தின் கட்டுப்பாட்டில் 9,000 ஹெக்டேர் நிலம் உள்ளது. ஏவுதள விஸ்தரிப்பு என்ற போர்வையில் குலாம்போ இனமக்களை தற்போது விரட்டத் தொடங்கியுள்ளதோடு, `இதெல்லாம் பொருளாதார வளர்ச்சிக்காகத்தான்’ என்று கூசாமல் சொல்லிவருகிறது பிரேசில்.

அழிவின்மீது கட்டமைக்கப்படும் வளர்ச்சி நிச்சயம் நன்மை பயக்காது என்பதை, எப்போது பிரேசில் புரிந்துகொள்ளுமோ!