Published:Updated:

ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டைக் கொடுத்த ஊழியர்கள்... சிகிச்சையில் 2 குழந்தைகள்? - என்ன நடந்தது

ஆசிட்

ஹோட்டலில் சாப்பிடச் சென்ற குழந்தைகளுக்குத் தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டைக் கொடுத்த ஊழியர்கள்... சிகிச்சையில் 2 குழந்தைகள்? - என்ன நடந்தது

ஹோட்டலில் சாப்பிடச் சென்ற குழந்தைகளுக்குத் தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஆசிட்

பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் இக்பால் பார்க் அருகே 'போயட் ரெஸ்ட்டாரன்ட் (Poet Restaurant ) என்ற ஹோட்டல் இருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது ஆதில் என்பவர், அந்த ஹோட்டலில் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் விழாவை நடத்தியதாகத் தெரிகிறது. அப்போது ஹோட்டல் ஊழியர்கள் அங்கிருந்தவர்களுக்குத் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளனர். அங்கிருந்த ஒரு பாட்டிலைத் திறந்து முஹம்மது ஆதிலின் சகோதரியின் மகன் அகமது தன்னுடைய கைகளை அந்த தண்ணீரால் கழுவியிருக்கிறார். உடனே அவர் வலி தாங்காமல் கத்த ஆரம்பித்தார். இதையடுத்து அவருடைய கைகளில் தீக்காயம் ஏற்பட்டதுபோல காயம் உண்டானது.

பாட்டில்
பாட்டில்

அப்போதுதான் அந்த பாட்டில்களில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே, இவருடைய சகோதரியின் மகள் வஜிஹா அந்த பாட்டிலில் இருந்த ஆசிட் தண்ணீரைத் தெரியாமல் குடித்துவிட்டார். இதையடுத்து அவர்களது இரண்டரை வயது குழந்தை வாந்தியெடுக்க ஆரம்பித்தது. இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வஜிஹாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் செப்டம்பர் 27-ல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், `ஹோட்டல் மேலாளர் முகமது ஜாவேத் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் மேலாளரைக் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்'' எனத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.