Published:Updated:

25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஹாரிபாட்டர் தொடர்; சிறப்பு நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட்!

ஹாரிபாட்டர் நாணயங்கள்

ஹாரிபாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் நாணயங்களை ராயல் மின்ட் வெளியிட உள்ளது.

25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஹாரிபாட்டர் தொடர்; சிறப்பு நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட்!

ஹாரிபாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் நாணயங்களை ராயல் மின்ட் வெளியிட உள்ளது.

Published:Updated:
ஹாரிபாட்டர் நாணயங்கள்
1997ஆம் ஆண்டு, ஜே.கே.ரெளலிங் எழுதிய, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மின்ட் வெளியிடவுள்ளது.

இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் ராயல் மின்ட் ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50p (pence) நாணயங்களை வெளியிட உள்ளது. இதுகுறித்து பேசிய ராயல் மின்ட் நிறுவனம், “ஹாரிபாட்டர் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களில் ஹாரியின் முகம் மட்டுமல்லாது, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் புதிய மன்னர் சார்லஸ்-III ஆகியோரின் உருவப்படங்களும் இருக்கும்.

ஹாரிபாட்டர் நாணயங்கள்
ஹாரிபாட்டர் நாணயங்கள்

மேலும் ஹாரிபாட்டர் தொடரில் இடம்பிடித்து மக்களை வெகுவாக கவர்ந்த டம்பில்டோர், ஹாக்வார்ட்ஸ் பள்ளி மற்றும் ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் உருவப்படங்களும் இருக்கும். நாணயங்களில் உள்ள வடிவமைப்பை, முடிந்தவரை துல்லியமாக வைத்திருக்க சிறப்பு லேசர்களைப் பயன்படுத்தி நாணயங்களை வடிவமைத்துள்ளோம். இந்த நாணயங்கள் ஒரு பிரகாசமான ஒளியின் கீழ் வைக்கப்படும் போது '25' என்ற எண் பொறிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் என்றும், இந்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் இந்த நாணயங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.