பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் ஜாம்பவானாக விளங்குபவர் ருபெர்ட் முர்டாச்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ருபர்ட்டுக்கு பரம்பரை தொழிலே பத்திரிகைதான். தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார் முர்டாச். ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த தனது பத்திரிகையை இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளுக்கு அவர் விரிவுப்படுத்தினார். அதிரடி செய்திகள் மூலம் அவரது பத்திரிகைகள் பிரபலமாகின. குறிப்பாக பிரபல நடிகர் - நடிகைகள், ராணுவ வீரர்கள் எனப் பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகின.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தனது 22 வயதில் ஊடகத்துறையில் நுழைந்த முர்டாச், ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் கடந்த 1956-ம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார். ஆனால், 1967-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட முர்டாச், 1999-ம் ஆண்டு அவரையும் பிரிந்து மூன்றாவதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, கடந்த 2013ம் ஆண்டு அவரையும் பிரிந்தார். அதனைத் தொடர்ந்து நான்காவதாக மாடல் மற்றும் நடிகையான ஜெர்ரி ஹாலை 2016-ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.