Published:Updated:

`ரஷ்யா இல்லாமல் ESA என்ன செய்ய முடியும்...' -செவ்வாய் கிரகத்திற்கானப் பயணத்தைத் தொடங்கும் ரஷ்யா!

மாதிரி படம்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று கூறிய நிலையில் சொந்தமாக செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தைத் தொடங்குவதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.

`ரஷ்யா இல்லாமல் ESA என்ன செய்ய முடியும்...' -செவ்வாய் கிரகத்திற்கானப் பயணத்தைத் தொடங்கும் ரஷ்யா!

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று கூறிய நிலையில் சொந்தமாக செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தைத் தொடங்குவதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.

Published:Updated:
மாதிரி படம்

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) எக்ஸோ மார்ஸ் திட்டத்தில் (Exo Mars mission) ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று கடந்த மார்ச் 17-ல் தெரிவித்திருந்தது. இதையடுத்து ரஷ்யா சொந்தமாக செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தைத் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது.

Russia's space agency - மாதிரி படம்
Russia's space agency - மாதிரி படம்

மார்ச் 16 மற்றும் 17 -ம் தேதிகளில் பாரிஸில் கூடிய ESA கவுன்சில், ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் 2022-ல் ரஷ்யா உடன் சேர்ந்து ஏவப்படவுள்ள எக்ஸோ மார்ஸ் ரோவர் (Exo Mars mission) மிஷனில் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது தற்போது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தது.

இதையடுத்து ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் (Roscosmos) தலைவர் டிமிட்ரி ரோகோசின் ‘மிக விரைவில் செவ்வாய் கிரகத்திற்கானப் பயணத்தை செயல்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்குவோம்’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும் 'ஏற்கெனவே ராக்கெட், ஏவுதளம் மற்றும் தரையிறங்கும் மாதிரி (module) ஆகியவற்றைக் கொண்டிருந்த ரஷ்யா இல்லாமல் ESA என்ன செய்ய முடியும் என்பதில் பெரிய சந்தேகங்கள் உள்ளன' என்றும் 'ESA க்கு அதன் சொந்த மாதிரியை (module) உருவாக்க குறைந்தது ஆறு ஆண்டுகள் தேவைப்படும்' என்றும் ரோகோசின் கூறியிருந்தார்.