Published:Updated:

சவுதி நாட்டு மன்னருக்கு எதிராக ட்வீட்; 5 குழந்தைகளின் தாய்க்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான்

சவுதி நாட்டு மன்னருக்கும் இளவரசருக்கும் எதிராக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சவுதி நாட்டு மன்னருக்கு எதிராக ட்வீட்; 5 குழந்தைகளின் தாய்க்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சவுதி நாட்டு மன்னருக்கும் இளவரசருக்கும் எதிராக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான்

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானுக்கும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை, அதே நாட்டைச் சேர்ந்த நூரா அல்-கஹ்தானி என்ற பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சைபர் கிரைம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டிருந்தார். நூரா மீதான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட நூராவுக்கு மன்னர் மற்றும் இளவரசர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததற்காக 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்
ட்விட்டர்

இதுக்குறித்து சவுதி நீதிமன்றம், `சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவால் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கிறது. நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்க விரும்புவோரின் செயல்பாடுகளைத் தூண்டுவதாகவும் அப்பதிவு உள்ளது. இப்பதிவு மூலம் சவுதி அரேபியாவின் சமூகக் கட்டமைப்பை நூரா சேதப்படுத்தியிருக்கிறார்" என்று கூறியுள்ளது. ஐந்து குழந்தைகளுக்குத் தாயான நூரா அல்-கஹ்தானிக்கு அளிக்கப்பட்ட இத்தீர்ப்புக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், இந்த தண்டனை என்பது மனித உரிமை நிலைமை எப்படி இருக்கிறது என்பதை எடுத்துரைகிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.