Published:Updated:

`மீ டூ சர்ச்சை; 600 வீரர்கள்; 7 மணிநேர தேடுதல்!’ - மலையில் இறந்துகிடந்த தென்கொரிய தலைவர்

சியோல் மேயர்
சியோல் மேயர் ( AP )

தென்கொரியாவின் சியோல் நகர மேயர், மாயமான நிலையில் ஒரு மலைப்பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்கொரிய தலைநகரான சியோலில் மேயராக இருப்பவர் பார்க் ஒன் சூன் (Park Won-soon). 64 வயதான இவர் சமூக மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞராகவும் தென்கொரியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகவும் அறியப்படுகிறார். முதன்முதலாக 2011-ம் ஆண்டு இவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போதிலிருந்து தொடர்ந்து 3-வது முறையாக சியோல் நகரின் மேயராகச் செயல்பட்டு வருகிறார். 2022-ம் ஆண்டு தென்கொரியாவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்தார்.

சியோல் மேயர்
சியோல் மேயர்
AP

சமீபத்தில் இவர் மீது மீ டூவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தென்கொரியாவிலேயே, பாலியல் புகாரில் சிக்கிய முதல் தலைவராகப் பார்க் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை தன் வீட்டிலிருந்து வெளியில் சென்ற பார்க் ஒன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இறுதியாகத் தன் மகளுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பியுள்ளார், அதன்பிறகு அவரின் மகள் பார்க்குக்கு தொடர்ந்து போன் மூலம் தொடர்புகொள்ள முயன்று முடியாமல் பிற்பகலுக்கு மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

மேயர் பார்க்குக்கு தனியாகப் பாதுகாப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளன, அத்தனை பாதுகாப்புகளையும் மீறி அவர் காணாமல் போனது மொத்த தென் கொரியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் வடக்கு சியோலில் இருக்கும் ஒரு மலைப்பகுதியில் கடைசியாகப் பார்க்கின் போன் சிக்னல் காட்டியுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் காவலர்கள், தீயணைப்புத் துறையினர் என 600 பேர், மோப்ப நாய்கள், ட்ரோன் போன்றவை ஈடுபடுத்தப்பட்டன.

தென் கொரியா
தென் கொரியா
AP

அந்த மலையைச் சுற்றிலும் சுமார் 7 மணிநேரம் நடந்த தீவிர தேடுதலுக்குப் பிறகு இன்று காலை இறந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளார் பார்க். அவரது இறப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தென்கொரிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி பேசியுள்ள சியோல் நகர போலீஸ் அதிகாரி லீ பியோங் சியோக், ``நேற்று காலை 10.53 மணிக்கு வடக்கு சியோலில் உள்ள வுட்டட் மலையின் நுழைவு வாயிலில் பார்க் காணப்பட்டுள்ளார். இது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதே இடத்தில்தான் இறுதியாகப் பார்க்கின் போனும் ஆஃப் ஆகியுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் நடந்த தேடுதலில் பார்க் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் `ஆன்லைன்’ வொர்க்.. தனிமனித இடைவெளி..! -2 ஆண்டுகளுக்கு பிளான் தயாரித்த தென்கொரியா #Corona

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நேற்று மேயர் பார்க் அலுவலகத்துக்கும் வரவில்லை அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை, மேலும் நேற்று அவர் பங்கேற்பதாக இருந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களையும் ரத்து செய்துவிட்டார். அவர் திடீரென காணாமல் போனதற்கும் இறந்ததற்கும் என்ன காரணம் எனத் தெரியவில்லை” என்று மேயர் அலுவலக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை, சியோல் மேயரின் முன்னாள் பெண் செயலாளர் ஒருவர் பார்க் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளதாக சியோல் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதற்குப் பிறகுதான் பார்க் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சியோல் மேயர் இறப்பு
சியோல் மேயர் இறப்பு
AP

தான் இறப்பதற்கு முன்னதாக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அதில், ``அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்வில் என்னுடன் இருந்து எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். என்னால் பெரும் கஷ்டத்தை சந்திக்கும் என் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சென்றுவருகிறேன்” என்று எழுதியுள்ளார்.

சியோல் நகர மேயர் பார்க் ஒன் சூன் திடீரென உயிரிழந்த விவகாரம் தென் கொரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு