Published:Updated:

எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!

எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!
பிரீமியம் ஸ்டோரி
எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!

கிட்டத்தட்ட கி.மு 1800-களிலிருந்து ஏதோ ஒரு வடிவில் இப்படியான ஒரு கால்வாயைக் கட்டவேண்டும் என முயற்சி செய்துவருகின்றனர் ஐரோப்பிய ஆட்சியாளர்கள்.

எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!

கிட்டத்தட்ட கி.மு 1800-களிலிருந்து ஏதோ ஒரு வடிவில் இப்படியான ஒரு கால்வாயைக் கட்டவேண்டும் என முயற்சி செய்துவருகின்றனர் ஐரோப்பிய ஆட்சியாளர்கள்.

Published:Updated:
எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!
பிரீமியம் ஸ்டோரி
எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!

கப்பலில் வேலை வாங்கித் தருகிறேன் என வரும் பழைய காமெடி ஒன்றில், கடலில் இறங்கிக் கப்பலை இறங்கித் தள்ள வேண்டும் என்பார் செந்தில். உண்மையில் அப்படியானதொரு சிக்கலை எதிர்நோக்கியிருக்கிறது சூயஸ் கால்வாயில் `கரைதட்டி’ நிற்கும் எவர்கிவன் என்னும் பெருங்கப்பல்.

சரி சம்பவம் என்னவென்று பார்ப்பதற்கு முன்பு சூயஸ் கால்வாய் ஏன் கட்டப்பட்டது, உலக வணிகத்தில் அதன் முக்கியத்துவம் என்னவென்று சுருக்கமான வரலாற்றைப் பார்ப்போம். என்னதான் உலகம் நவீன மயமாகிவிட்டாலும் பேரதிக எடைகொண்ட சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்குக் கடல்வழிப் போக்குவரத்தையே நம்பியிருக்கிறோம். அதனால்தான் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கிய வழித்தடமாகிறது வெறும் 193 கிலோமீட்டர் நீளமுள்ள சூயஸ் கால்வாய். இந்தியாவிலிருந்து செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றித்தான் இன்றுவரையிலும் சென்றுகொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படும் விரயம் அதிகம். மும்பையிலிருந்து லண்டனுக்குப் பேரளவு பருத்தி ஏற்றுமதி செய்யவேண்டும் என வைத்துக்கொள்வோம். சூயஸ் கால்வாய் கட்டப்படுவதற்கு முன் மும்பையிலிருந்து கிளம்பும் கப்பல் மொத்த ஆப்பிரிக்கக் கண்டத்தையும் சுற்றித்தான் லண்டனை அடைய முடியும். இந்தப் பயணத்தின் நேரத்தைப் பெரிய அளவில் குறைக்கவே எகிப்திற்கு மேல் இந்தக் கால்வாய் கட்டப்பட்டது. இது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைத்தது.

எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!

கிட்டத்தட்ட கி.மு 1800-களிலிருந்து ஏதோ ஒரு வடிவில் இப்படியான ஒரு கால்வாயைக் கட்டவேண்டும் என முயற்சி செய்துவருகின்றனர் ஐரோப்பிய ஆட்சியாளர்கள். ஆனால், சூயஸ் கால்வாய் சாத்தியமானது என்னவோ கி.பி.19-ம் நூற்றாண்டில்தான். 10 வருடம், 15 லட்சம் பேரின் உழைப்பில் தயாரானது இந்தக் கால்வாய். ஆனால், இன்றுவரையிலும் இப்படியான சிக்கலை அது சந்திக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மார்ச் 23-ம் தேதி கால்வாயில் சிக்கிக்கொண்டது ‘எவர்கிரீன்’ என்னும் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தின் ‘எவர்கிவன்’ கப்பல். சுமார் 400 மீட்டர் நீளமான இந்தக் கப்பல் 200 மீட்டர் அகலமான சூயஸ் கால்வாயில் குறுக்காகச் சிக்கிக் கொண்டுள்ளது. இதற்கு அங்கு நிலவிய கடுங்காற்று ஒரு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதில் மனிதத் தவறும் இருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இப்படி எவர்கிவன் தரைதட்டி நிற்பதால் இரண்டு பக்கங்களிலும் கப்பல்கள் பல முன்னேற முடியாமல் காத்திருக்கின்றன. பல நிறுவனங்களும் பெருமளவில் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எண்ணெய்க் கப்பல்களும் நகரமுடியாமல் நிற்பதால் சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகூட பெருமளவில் உயர்ந்திருக்கிறது. சரி சிக்கி நிற்கும் கப்பலை மீட்க என்ன செய்துவருகிறார்கள்?

* கப்பல் இரண்டு கரையிலும் சிக்கியிருக்கின்றது. அதனால், அதற்குக்கீழ் இருக்கும் மண்ணை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* கப்பலின் எடையைக் குறைக்கலாமா என்றும் யோசித்துவருகிறார்கள். கப்பலில் இருக்கும் 20,000 கண்டெய்னர்களில் சிலவற்றை எடுப்பது, கப்பலின் எரிபொருளை வெளியேற்றுவது என இந்த யோசனைகள் நீள்கின்றன. ஆனால், கப்பலின் சமநிலை குலையலாம் என அஞ்சப்படுவதால், இந்த யோசனைக்குத் தற்காலிகத் தடை விதித்திருக்கிறார்கள்.

எவர்கிவன் கப்பலே கடல் சேரு ஏலேலோ!

20,000 டன் மணல் அள்ளப்பட்டும் கப்பல் பெரிதாக நகர்ந்தபாடில்லை. கப்பலை அங்கிருந்து மீட்க எப்படியும் சில நாள்கள், ஏன் சில வாரங்கள்கூட ஆகலாம் என்கிறார்கள். இதனால் உடனடியாக ஒரு முடிவை எடுத்தாகவேண்டிய சூழலில் சிக்கிக்கொண்டிருக்கின்றன இருமருங்கிலும் அணிவகுத்துக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்கள். சரி, இந்தப் பாதையை மறந்துவிட்டு ஆப்பிரிக்காவைச் சுற்றிப் போகலாம் என்றால், அது இன்னும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்குச் சமம். எப்படிப் பார்த்தாலும் நஷ்டம் மட்டும் உறுதி.

விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.