Published:Updated:

`ஆபரேஷன் மார்வெல்': போதைக் கும்பலை மடக்கிப்பிடித்த `அவெஞ்சர்ஸ்’... எங்கு தெரியுமா?! | Video

சூப்பர் அவெஞ்சர்ஸாக மாறிய போலீஸ் ( ட்விட்டர் )

அமெரிக்காவின் திரைப்பட சூப்பர் ஹீரோக்கள்போல வேடமணிந்து, போலீஸார் போதைப்பொருள் வியாபாரிகளைல் கைதுசெய்த சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது.

`ஆபரேஷன் மார்வெல்': போதைக் கும்பலை மடக்கிப்பிடித்த `அவெஞ்சர்ஸ்’... எங்கு தெரியுமா?! | Video

அமெரிக்காவின் திரைப்பட சூப்பர் ஹீரோக்கள்போல வேடமணிந்து, போலீஸார் போதைப்பொருள் வியாபாரிகளைல் கைதுசெய்த சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது.

Published:Updated:
சூப்பர் அவெஞ்சர்ஸாக மாறிய போலீஸ் ( ட்விட்டர் )

அமெரிக்காவின் திரைப்பட சூப்பர் ஹீரோக்களான அவெஞ்சர்ஸ் குழுவின் ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், பிளாக் விடோ ஆகியோரின் வேடமணிந்து போதைப்பொருள் வியாபாரிகளை போலீஸார் கைதுசெய்தனர்.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் லிமா நகர் காவல்துறைக்கு, போதைப்பொருள் வியாபாரிகள் கும்பல் ஒரு குடியிருப்பில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்றனர். போலீஸ் உடையில் சென்றால் அவர்கள் தப்பிவிடுவார்கள் என யோசித்த போலீஸ் அதிகாரிகள் அமெரிக்காவின் திரைப்பட சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், பிளாக் விடோ ஆகியோரின் வேடமணிந்து ஹாலோவீன் கொண்டாட்டம்போல் குற்றவாளிகள் இருக்கும் பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள்.

ஹீரோக்களைப் போன்று வேடமணிந்து சென்ற போலீஸைக் கண்ட குழந்தைகள் இவர்களிடம் பேசி விளையாடியிருக்கிறார்கள். போலீஸ் லிமாவின் சான் ஜுவான் டி லுரிகாஞ்சோ பகுதிக்கு வந்ததும், ஒரு குறிப்பிட்ட வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, போதைப்பொருள் விற்பனை செய்யும் மூன்று ஆண்களையும், ஒரு பெண்ணையும் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரிகள்," ஒரு பூங்காவில் போதைப்பொருள் விற்கப்படுவதாகவும், போலீஸாரால் தேடப்பட்ட குற்றவாளிகள் குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் கூண்டோடு பிடிக்க திட்டமிட்டோம். அதனால், அவர்களைப் பிடிக்கும் திட்டத்துக்கு `ஆபரேஷன் மார்வெல்' என்று பெயரிட்டோம்.

அந்தத் திட்டத்தின்படியே குற்றவாளிகளையும் பிடித்தோம். 3,250 சிறிய பேக்கேஜ்களான கோகோ இலையின் கச்சா சாறு, அத்துடன் 287 கோகோயின் பைகள், 127 மரிஜுவானா ஆகியவற்றையும் கைப்பற்றியிருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.