Published:Updated:

உலகநாடுகள் கண் வைக்கும் இலங்கையின் திரிகோணமலை! - ரகசியம் என்ன?

திரிகோணமலை

ராஜபக்சே தனது பாதுகாப்புக்காக திரிகோணமலை கடற்படைத் தளத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? திரிகோணமலையைச் சுற்றியிருக்கும் புவிசார் அரசியல் என்ன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

உலகநாடுகள் கண் வைக்கும் இலங்கையின் திரிகோணமலை! - ரகசியம் என்ன?

ராஜபக்சே தனது பாதுகாப்புக்காக திரிகோணமலை கடற்படைத் தளத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? திரிகோணமலையைச் சுற்றியிருக்கும் புவிசார் அரசியல் என்ன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

Published:Updated:
திரிகோணமலை

வரலாற்றில் இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்துவருவது உலகறிந்த செய்து. அத்தியாவசியப் பொருள்களான அரிசி, காய்கறிகள் முதல் பெட்ரோலியப் பொருடள்கள் வரை அனைத்தும் விண்ணைமுட்டும் அளவுக்கு விலை உயர்ந்திருக்கின்றன. இன்னொருபக்கம் ஏற்றுமதி இறக்குமதி என எல்லாமே தடைபட்டு பொருள்கள் பற்றாக்குறையும் நிலவிவருகின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசுக்கு எதிராக மிகத்தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது, ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் வன்முறையாக மாறியது. ராஜபக்சே மற்றும் அவர் குடும்பத்தினர், அமைச்சர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்க, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனே ராஜபக்சே தனது குடும்பத்தினரோடு கொழும்பு பகுதியை விட்டு, தமிழ்ப்பகுதியான திரிகோணமலைக்கு ஓட்டமெடுத்தார். தற்போது அங்குள்ள கடற்படை தளத்தில்தான் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக தங்கியிருக்கிறார். ராஜபக்சே தனது பாதுகாப்புக்காக திரிகோணமலை கடற்படைத் தளத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? திரிகோணமலையைச் சுற்றியிருக்கும் புவிசார் அரசியல் என்ன என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயற்கையின் கொடை திரிகோணமலை!

இயற்கையாக அமைந்த உலகின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்டிருக்கிறது திரிகோணமலை. மூன்றுமலைகள் சூழ்ந்திருக்கும் வளமிக்கப் பகுதி என்பதால் இந்தப் பெயர். இங்குதான், கோவம்கொண்ட ராவணன் தன் வாளாலே மலையை வெட்டினான் என்று புராணக்கதைகள் சொல்லும் 'ராவணன் வெட்டு' என்ற இடமும், அருகருகே அமைந்தபோதும் வெவ்வேறு விதமான வெப்பநிலைகளைக் கொண்டிருக்கும் ஏழு அதிசய ஊற்றுக்களும் இருக்கின்றன. `தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி' என்று வர்ணிக்கப்படும் திரிகோணமலையில் 1623-ம் ஆண்டு டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட ப்ரெட்ரிக் கோட்டையும், அந்தக் கோட்டை வாசல் மதிலில் 16-ம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டும் நிலைகொண்டிருக்கின்றன.

திரிகோணமலை
திரிகோணமலை

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கடற்படையால் போர்த்தளமாக பயன்படுத்தப்பட்ட சீன வளைகுடா (China Bay) அரணும், போரில் உயிர்நீத்த வீரர்களின் சமாதியும் இன்றும் போர்நினைவுகளைப் பேசுகின்றன. இயற்கை எழில்கொஞ்சும் நிலாவெளிக் கடற்கரையும், புறாமலைத் தீவுகளும், ஆன்மீகம் நிறைந்த திருக்கோணேஸ்வர ஆலயமும், லட்சுமி நாராயணன் ஆலயமும் இடம்பெற்று அழகையும் பக்தியையும் வெளிக்காட்டுவதுபோல, வெளிவுலகுக்கே காட்டப்படாத அரசியல் ரகசியங்களும்கூட திரைமறைவில் இங்கு புதைந்திருக்கின்றன.

திரிகோணமலை
திரிகோணமலை

திரிகோணமலை கடற்படைத்தளம்:

1956-ல் பிரிட்டிஷ் ராயல் கடற்படையிடமிருந்து, ராயல் சிலோன் கடற்படைக்கு கைமாற்றப்பட்ட இந்த கடற்படைத்தளம், இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கடற்படையினரின் ஜப்பான் மீதான தாக்குதலிலும், நான்காம் ஈழப்போரில் இலங்கை ராணுவத்தின் விடுதலைப் புலிகள் மீதான இறுதியுத்தத்திலும் முக்கியப் பங்காற்றியது. போர்த்துக்கீசிய, டச்சு, ஆங்கிலேயேர்கள் காலத்திலேயே பாதுகாப்பு ரீதியில் மிகத்தெளிவாக திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ராணுவப் படையணி தலைமையகம், போர்த்தளவாட பயிற்சி மைதானங்கள், முகாம்கள், விமான ஓடுதளங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதிகள், போர்க்கப்பல்கள் நிலைகொள்ளும் ஆழமான கடற்படைத்தளங்கள், கணக்கிலடங்காத கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் என எல்லாம் நிறைந்த ஒரு நிழல் ராணுவ ராஜாங்கமே நடைபெற்றுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கடற்படைத் தளத்தை அவ்வளவு எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது. 10 கி.மீட்டருக்கு அப்பாலிருந்தே ராணுவ சோதனைச் சாவடிகளை எதிர்கொள்ள வேண்டும். கடற்படைத் தளத்தை நெருங்க நெருங்க எல்லா மூலைகளிலிருந்தும், அதிநவீன ஆயுதங்கள் ஏந்திய ராணுவ வீரர்களின் கவச வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டபடியே ரோந்து நடத்திக்கொண்டிருக்கும். இப்படி, அதிதீவிர கண்காணிப்பில் பலகட்ட பாதுகாப்பு அடுக்குகளைத் தாண்டித்தான் ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்திருக்கிறார். மேலும் பல சோகுசு பங்களாக்களும், சோபர் தீவு போன்ற பகுதிகளில் நட்சத்திர விடுதிகளும்கூட இருக்கின்றன.

 இலங்கை கடற்படை
இலங்கை கடற்படை

நிலத்தடி வதை முகாம்கள்:

ஆச்சரியம், பிரம்மிப்பு மட்டுமல்லாமல், அதிர்ச்சியை ஏற்படுத்தும் பல கறுப்புப் பக்கங்களையும் இந்தக்கடற்படைத் தளம் உள்ளடக்கியிருக்கிறது. அதாவது நிலத்தடி ரகசிய சித்தரவதை முகாம்களாக! `கான்சைட்' எனப்படும் இந்த சித்தரவதை முகாம்களில் 2007 முதல் 2009 வரையிலான ஈழப்போர் காலகட்டத்தில் போர்க் கைதிகளாக பிடிபட்ட விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்றபேதமின்றி அடைத்துவைக்கப்பட்டனர். அவர்கள் பலகாலம் இலங்கை ராணுவத்தால் கடும் சித்தரவதைகள் செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகள்

அப்படித்தான் கடற்புலிகளின் தளபதி சூசையின் குடும்பத்தினர்கள் உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் அடைத்துவைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டதாக ஐ.டி.ஜே.பி (International trust and justice project - ITJP) என்ற சர்வதேச அமைப்பு ஆதரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து ஐ.நா. சிறப்புக்குழு நடத்திய சோதனையில், இரத்தக் கறைகள் படிந்த சுமார் 12 சித்தரவதைக் கூடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த கான்சைட் முகாம்கள் சித்தரவதைக்கு பயன்படுத்தப்படவில்லை, புலனாய்வு நடவடிக்கைக்காகவே பயன்படுத்தப்பட்டது என முழுப் பூசணியை சோற்றில் மறைத்தது இலங்கை அரசாங்கம்!

ஆனால், இந்த கான்சைட் முகாம்கள் சித்ரவதைக்கு பயன்படுத்தப்படவில்லை, புலனாய்வு நடவடிக்கைக்காகவே பயன்படுத்தப்பட்டது என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும், போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகளை நினைவுகொள்ளும் வகையில், திரிகோணமலை ஆலங்குளத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்கள் துயிலும் இல்லத்தையும் இலங்கை அரசாங்கம் இடித்து அகற்றியது.

நிலத்தடி சித்தரவதைக் கூடங்கள்
நிலத்தடி சித்தரவதைக் கூடங்கள்

உள்நாட்டு அரசியலும், உலக அரசியலும்:

தனிநாட்டு கேட்டுப்போராடிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ தலைநகராக திரிகோணமலை இருந்தது. அதற்குக் காரணம் அதன் பூலோக அமைப்பு. மூன்று பக்கமும் வனங்கள் நிறைந்த மலைகளால் சூழப்பட்டு ஒரு வளைகுடா போல அமைந்திருக்கும் ஒரு இயற்கைத் துறைமுகம். காலநிலை மாற்றத்தால் உண்டாகும் புயல், மழை, ஆழிப்பேரலைகள் போன்ற இயற்கைப் பேரிடர்களால்கூட பெரிதளவில் பாதிக்கப்படாத, சேட்டிலைட், ரேடார், சோனார் போன்ற செயற்கை கண்காணிப்புத் தொழில்நுட்பங்களுக்கே சவால்விடுகின்ற ஒரு பாதுகாப்பான அமைவிடம். இலங்கைக்கு கிழக்கிலும், இந்தியப் பெருங்கடலுக்கு மையத்திலும் அமைந்திருக்கும் இந்த இடத்திலிருந்து தென் கிழக்காசியப் பிராந்தியம் முழுவதையுமே கட்டுப்படுத்தலாம். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, பசிபிக் பெருங்கடல் வழியாக வர்த்தகத்திலும், போர் நடவடிக்கையிலும் ஈடுபட மிகக்கச்சிதமான ஒரு தேர்வு இந்த இடம் என்பதால்தான் இங்கு கால்பதிக்க உலக வல்லரசுகள் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன.

பிரபாகரன் - பாலசிங்கம்
பிரபாகரன் - பாலசிங்கம்
eelam view
அமெரிக்காவின் நோக்கம் இந்தப்பிராந்தியத்தில் தந்திரமான பூகோள நலன்களைக் கொண்டுள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை இயற்கைத் துறைமுகத்தில் தனது படைத்தளத்தை நிறுவவும் அதன்மூலம் படிப்படியாக ஊடுருவி தனது ஆதிக்கத்தின்கீழ் இலங்கையை கொண்டுவருவதுமாகும்.
பிரபாகரன், தி வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்...

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, திரிகோணமலையில் அமெரிக்கா தனது படைத்தளத்தை நிறுவ பலமுறை முயற்சிசெய்து தோற்றுப்போன வரலாறும் உண்டு. இதை பிரபாகரன் 1986-ல் இந்தியாவின் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``அமெரிக்காவின் நோக்கம் இந்தப்பிராந்தியத்தில் தந்திரமான பூகோள நலன்களைக் கொண்டுள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை இயற்கைத் துறைமுகத்தில் தனது படைத்தளத்தை நிறுவவும் அதன்மூலம் படிப்படியாக ஊடுருவி தனது ஆதிக்கத்தின்கீழ் இலங்கையை கொண்டுவருவதுமாகும்" என இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவி செய்வதன் காரணத்தை உடைத்துப் பேசியிருந்தார்.

ராஜபக்சே
ராஜபக்சே

ராஜபக்சே தஞ்சம்:

அரசியல், வர்த்தகம் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலையில்தான், பாதுகாப்பு கருதி இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தஞ்சம் அடைந்திருக்கிறார். எந்த தமிழ் மக்களுக்கு எதிராக 2009-ல் மிகப்பெரிய போரைத் தொடுத்தாரோ, அதே தமிழ்மக்கள் வசிக்கும் பகுதியில்தான் இன்று (2022) தனது சொந்த சிங்கள மக்களிடமிருந்தே பாதுகாப்பு கருதி தஞ்சம் அடைந்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism