Published:Updated:

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஓராண்டு... வழக்கு விசாரணை எந்த நிலையில் இருக்கிறது?

ஈஸ்டர் தாக்குதல்

இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தலைவர்கள் பலரும்கூட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் இந்தத் தாக்குதல் திட்டம் குறித்து அரசுக்கு தொடர்ச்சியாக் கடிதம் எழுதி வந்தனர். ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஓராண்டு... வழக்கு விசாரணை எந்த நிலையில் இருக்கிறது?

இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தலைவர்கள் பலரும்கூட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் இந்தத் தாக்குதல் திட்டம் குறித்து அரசுக்கு தொடர்ச்சியாக் கடிதம் எழுதி வந்தனர். ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

Published:Updated:
ஈஸ்டர் தாக்குதல்
2019 ஏப்ரல் 21... அப்படியொரு விடியலை இலங்கை மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்திருக்கவில்லை. இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில், ஈஸ்டர் பிரார்த்தனைக்காக மக்கள் தேவாலயங்களில் குவிந்திருந்தபோது, நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

காலை 8.30 மணிக்கு, முதல் குண்டு, நீர்கொழும்பு, புனித செபஸ்தியான் தேவாலயத்தில் வெடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் மரணித்தனர். பலர் படு காயமடைந்தனர். வெள்ளை நிற உடையில் இயேசுபிரானின் சிலையில் ரத்தக்கறையோடிருக்கும் புகைப்படம் செய்திகளில் வெளியானது, உலகத்தின் ஆன்மா ஒருகணம் நொறுங்கிப் போனது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே, அடுத்த குண்டு கொழும்பு, புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடித்தது. 50-க்கும் மேலானோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து, மூன்றாவது குண்டு தமிழர் பகுதியான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் வெடித்தது. 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

Easter attack
Easter attack

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவாலயங்கள் மட்டுமல்லாது, இலங்கையின் ஈஸ்டர் விழாக்கோலத்தைக் கண்டு ரசிப்பதற்காக வந்திருந்த வெளிநாட்டினர் தங்கியிருந்த, கொழும்பு கிங்ஸ்பெர்ரி, சினமன் கிரான்ட் மற்றும் சங்ரிலா ஆகிய மூன்று, ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. டென்மார்க் தொழிலதிபர் ஆன்டர்ஸ் பவுல்சென் என்பவரின் மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வங்காளதேச அரசியல்வாதி சேக் பசுலுல் செலிம் என்பவரின் பேரனும் இறந்தவர்களில் ஒருவர் ஆவார். இந்திய சமயச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 40 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலை 8.45 - 9.15 அரை மணி நேர இடைவெளியில், இலங்கை முழுவதும் நிகழ்ந்த இந்தத் தாக்குதல்களில் மொத்தமாக 248 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாது நண்பகல் நேரத்தில் கொழும்பின் தெற்குப் புறநகரான தெஹிவளை, விலங்கியல் பூங்காவுக்கு அருகிலுள்ள `ட்ரப்பிக் இன்’ என்ற விடுதியில் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, கொழும்பு முழுவதும் காவலர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் குண்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குண்டுகள் வெடித்ததில் மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 359 பேர் என இலங்கை அரசின் சார்பில் சொல்லப்பட்டாலும், அதைவிட அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Easter attack
Easter attack

தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் இலங்கை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தவறியதற்காக, அரசுப் பொறுப்பில் இருந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக அவர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதேவேளை இலங்கையில் இப்படியொரு தாக்குதல் நடைபெறப்போகிறது என உலக நாடுகள் பல எச்சரித்தும், இந்திய உளவுத்துறை எச்சரித்தும், இலங்கை அரசு அது குறித்து அக்கறை கொள்ளாது மெத்தனமாக இருந்தது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு முடிந்துவிட்டது. இந்தநிலையில், வழக்கு விசாரணை தற்போது எந்தநிலையில் இருக்கிறது, என்பது குறித்து இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பேசினோம்,

''இந்தத் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் அறிக்கை இன்றளவும் வெளியிடப்படவில்லை. அதுபோல, கைது செய்யப்பட்டவர்களின் மீதும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எந்த வழக்கும் பதியப்படவில்லை. அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் தடுப்புக் காவலில்தான் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு தமிழகத்திலும் சிலருடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், விசாரணை இன்னும் மந்தநிலையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள் குறித்த விசாரணையை வெகு சீக்கிரமாகவே முடித்துவிடும் இலங்கை அரசாங்கம் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு மந்தமாகச் செயல்படுவது எங்களுக்கும் மர்மமாகவே இருக்கிறது'' என்கிறார் சிவாஜிலிங்கம்.

Sivajilingam
Sivajilingam

இந்தியா உட்பட உலக நாடுகள் பல எச்சரித்தும் இலங்கை அரசு அமைதியாக இருந்தது ஏன்?

இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரான நிலாந்தனிடம் பேசினோம்,

''அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த முரண்பாடே இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனதற்கான முதன்மையான காரணம். தாக்குதல் நடைபெறுவதற்கு முந்தைய ஆறு மாத காலம் நடந்த, ஒரு பாதுகாப்புக் கவுன்சில் கூட்டங்களுக்குக்கூட, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, மைத்திரிபால சிறிசேனா அழைக்கவே இல்லை. தாக்குதல் நடந்த காலத்தில் மைத்ரிபாலா சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் இருந்தார். பிரதமர் ரணிலுக்கும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எந்த அப்டேட்டும் அப்போதைக்கு இல்லை.

அடுத்ததாக, உலக நாடுகள், இந்தியா மட்டுமல்ல, இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தலைவர்கள் பலரும்கூட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் இந்தத் தாக்குதல் திட்டம் குறித்து அரசுக்கு தொடர்ச்சியாக் கடிதம் எழுதி வந்தனர். ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. காரணம், இது போன்ற இஸ்லாமிய அமைப்புகள் எப்போதும் சிங்கள அரசுக்கு மிகவும் நெருக்கமானவை. சிங்கள ஆட்சியாளர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தங்களின் நட்பு சக்திகளாகவே கருதி வந்தனர். அதனால்தான் மிகவும் மெத்தனமாக இருந்துவிட்டனர். எப்போதும் தமிழர்களையே எதிரிகளாக, அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலேயே தீவிர அக்கறை காட்டும் அரசின் புலனாய்வு அமைப்பும் இந்த விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டது. அதேநேரம் பல கிறிஸ்துவ அரசதிகாரிகளுக்கும் இந்தத் தாக்குதல் குறித்து முன்பே தெரிந்திருக்கிறது. அவர்களும் சில தேவாலயங்களைச் சேர்ந்தவர்களிடம் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Nilandhan
Nilandhan

தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகள்தான். தேவாயலங்களில் நிகழ்ந்த தாக்குதல்களைப் பொறுத்தவரையில் ஒரு பகுதி முழுமையான தமிழர் பகுதி. மற்ற இரண்டு இடங்களில் தமிழர்கள் சிங்களர்கள் பெருகி வாழ்ந்தாலும், சிங்கள மொழியில் வழிபாடு நடக்கும் நேரத்தை விடுத்து சரியாகத் தமிழில் வழிபாடு நடக்கும் நேரத்தில்தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்தத் தாக்குதல் முழுக்க பௌத்த சிங்கள ஆட்சியாளர்களை அச்சுறுத்துவதற்காகத்தான். தமிழர்களை வெறும் பகடைக்காய்களாக மட்டுமே அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். நேரடியாக சிங்களர்களைத் தாக்கினால் பின்விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதாலேயே, தமிழர்கள் அதிகமாகப் பலியாகும் விதத்தில் இந்தத் தாக்குதக் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

சிங்களவர்கள் சிலரும், வெளிநாட்டினர் சிலரும் கொல்லப்பட்டிருந்தாலும், இந்தத் தாக்குதல் இறந்தவர்களில் 60 சதவிகித்ததினர் தமிழர்கள்தான். இறந்தவர்களின் பட்டியலைக் கூட இன ரீதியாக வெளியிடாமல் மத ரீதியாகவே அரசாங்கத்தினர் அடையாளப்படுத்தினர். விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதற்கும் இதுதான் காரணம். கண்துடைப்புக்காக அரசப் பதவியில் இருக்கும் சில முக்கியப் பிரமுகர்களைக் கைது செய்தார்கள். ஆனால், அவர்கள் பலியாடுகள்தான். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தப்பித்துக்கொள்வதற்காகப் போடப்பட்ட திட்டம்தான் அது'' என்கிறார் நிலாந்தன்.

பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக, கடந்தாண்டு இதேநாளில் உயிரிழ்ந்த மக்கள், அனைவருக்கும் நம் அஞ்சலியை செலுத்துவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism