Published:Updated:

தினமும் 8 மணி நேரம் பவர் கட்; பெட்ரோல், டீசலுக்கு நீண்ட வரிசை! -தட்டுப்பாடுகளால் தவிக்கும் இலங்கை

இலங்கை

ஒரு லிட்டர் பெட்ரோல் போடுவதற்கே ஒருநாள் முழுவதும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், கல்லூரிக்கு செல்ல முடியதாகவும், கரன்ட் தட்டுப்பாட்டால் வாழ்க்கைமுறை பெரிதும் பாதிக்கபடுவதாக கூறினார், இலங்கை மாணவர் ஒருவர்.

தினமும் 8 மணி நேரம் பவர் கட்; பெட்ரோல், டீசலுக்கு நீண்ட வரிசை! -தட்டுப்பாடுகளால் தவிக்கும் இலங்கை

ஒரு லிட்டர் பெட்ரோல் போடுவதற்கே ஒருநாள் முழுவதும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், கல்லூரிக்கு செல்ல முடியதாகவும், கரன்ட் தட்டுப்பாட்டால் வாழ்க்கைமுறை பெரிதும் பாதிக்கபடுவதாக கூறினார், இலங்கை மாணவர் ஒருவர்.

Published:Updated:
இலங்கை
``மாணவர்களே.. வண்டிக்கு பெட்ரோல் போடமுடியாததால் இன்று நேரடியாக காலேஜ் வரமுடியவில்லை. கரன்ட் இல்லாததால் ஆன்லைன் வகுப்பும் எடுக்க முடியவில்லை."

இது ஒரு நாட்டில் கல்லூரி பேராசிரியர் மாணவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. அந்நாட்டில் தற்போது தினமும் 8 மணிநேரம் மின்தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம் ஒரு டீ 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுவெல்லாம் நடைபெறுவது வேறு எங்குமில்லை. நமது அண்டை நாடான இலங்கையில் தான்.

ஒட்டுமொத்த இலங்கையுமே கடந்த 1 மாதமாக மின், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான கொழும்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கை மக்கள் கடந்த சில நாள்களாக காலை எழுந்ததும் முதலில் பார்ப்பது அன்றைய நாளுக்கான மின்தடை அட்டவணையைதான். ஆம், தினமும் அட்டவணை போடப்பட்டு மின்தடை செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று எரிபொருள் தட்டுப்பாடு.

தினமும் 8 மணி நேரம் பவர் கட்; பெட்ரோல், டீசலுக்கு நீண்ட வரிசை! -தட்டுப்பாடுகளால் தவிக்கும் இலங்கை

பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டுமே நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியுடன் எரிபொருள் விலை உயர்வு செய்தியும் உடன்வருகின்றது. மக்களை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகின்றது. கடந்த பலமாதங்களாகவே இலங்கையில் நிகழும் பொருளாதார சூழலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான பணவீக்கமும் , பெரும் அளவிலான கடன் சுமையுமே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. பலவேறுபட்ட அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை கொண்ட இந்த நிலையால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் அந்நாட்டு மக்களே.

ஒரு லிட்டர் பெட்ரோல் போடுவதற்கே ஒருநாள் முழுவதும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், கல்லூரிக்கு செல்ல முடியாதாகவும் , மேலும் கரன்ட் தட்டுப்பாட்டால் வாழ்க்கைமுறை பெரிதும் பாதிக்கபடுவதாக கூறினார், இலங்கையை சேர்ந்த மாணவர் ஒருவர் .

தினமும் 8 மணி நேரம் பவர் கட்; பெட்ரோல், டீசலுக்கு நீண்ட வரிசை! -தட்டுப்பாடுகளால் தவிக்கும் இலங்கை

மற்றொரு மாணவரி டம் பேசியபோது அவர், பெரும் அளவில் விலைவாசி உயர்ந்தாதாகவும், ஆன்லைன் கோர்ஸ்களை படிக்க முயலுகையில் இலங்கை பணமதிப்பில் பெரும் தொகையை செலுத்தவேண்டியிருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே இருந்த இந்நிலையில் அடிப்படை தேவைகளான எரிபொருளும் மின்சாரமும் கூட கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், தான் கல்லூரியின் இறுதி செமெஸ்டரில் இருப்பதால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் வருந்தினார். டீசலை எரிபொருள் நிலையத்திற்கு கொண்டுவருகையில் மக்கள் அதை பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் அளவிற்கு அவல நிலையில் உள்ளனர். நாடுமுழுவதும் பரவலாக மக்கள் அரசின்மீது நம்பிக்கை இழந்துவிட்ட நிலையே தென்படுகின்றது.

தற்போதைய நிலையில், இத்தகைய தட்டுப்பாடுகள் வரும் வாரங்களிலும் தொடர்வது தவிர்க்கவியலாததாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதை சரிக்கட்ட பலவகையான திட்டங்களையும் கொண்டுவர முயல்கின்றனர். 5 நாட்கள் அல்லாமல், வாரத்தில் நான்கு நாட்களாக வேலைநேரத்தை குறைக்குமாறு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும் மக்கள் அதிக அளவில் எரிபொருளை வாங்குவதிலிருந்து தவிர்க்க, ஒரு தனி நபர் வாங்கும் எரிபொருளின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதிக விலை கொடுக்கும்வகையில் திட்டம் வகுப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“நாடு எதிர்நோக்கும் பிரச்னை மின்சார உற்பத்தி சிக்கலோ அல்லது எரிபொருள் தட்டுப்பாடோ அல்ல... மாறாக டாலர் இல்லாமையே” என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமீபத்துல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலை தொடருமானால் பொதுமக்களின் நிலை மிகவும் சிக்கலாகி விடும் என வருந்துகிறார்கள்.