Published:Updated:

இத்தாலியில் அவசர நிலை பிரகடனம்; 70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி!

இத்தாலி

70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி காரணமாக இத்தாலி அரசு 5 பிராந்தியங்களில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

இத்தாலியில் அவசர நிலை பிரகடனம்; 70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி!

70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி காரணமாக இத்தாலி அரசு 5 பிராந்தியங்களில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
இத்தாலி

மழையின்மை, வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சியை இத்தாலி சந்தித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக Lombardy, Emilia-Romagna, friuli Venezia Giulia, Piedmont and Veneto என்று இத்தாலியின் மிக நீளமான நதியான போ (PO) நதியைச் சுற்றியிருக்கிற இந்த 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இத்தாலி அரசு இந்தப்பகுதிகளுக்கு டிசம்பர் 31 வரை அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

 இத்தாலி
இத்தாலி

இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது. இதுமட்டுமின்றி நீர் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியை அறிவித்துள்ளது. மேலும் "அவசர நிலை தற்போதைய சூழ்நிலையை அசாதாரண வழிமுறைகள் மற்றும் அதிகாரங்களுடன் நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று இத்தாலி அரசு கூறியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!