உக்ரைனில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து அண்மையில் பேசிய உக்ரைன் அதிபர் அவையின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் தொடங்கியிருக்கிறது எனக் கூறியிருந்தார். பிப்ரவரி 24 -ம் தேதி தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் தன் உயிரைக் காப்பற்றியதாக உக்ரைன் இராணுவ வீரர் பதிவிட்ட காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் பதிவிட்ட காணொளியில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலால் வந்த 7.62mm அளவு கொண்ட புல்லட் ஒன்று உக்ரைன் இராணுவ வீரரின் ஸ்மார்ட்போனில் பட்டு அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாகக் அவர் பதிவிட்டக் காணொளியில் கூறியுள்ளார். மேலும் 'ஸ்மார்ட்போன் என் உயிரைக் காப்பற்றியது' என்று தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர் காணொளி வைரலாகி வருகிறது.
