அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

என்னங்க சார் உங்க சட்டம்?

என்னங்க சார் உங்க சட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்னங்க சார் உங்க சட்டம்?

ஜார்ஜியா நாட்டிலுள்ள குவிட்மேன் நகரத்தில், கோழிகள் சாலையைக் கடக்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது

கடுமையான சட்டங்கள்கொண்ட நாடுகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விநோதமான, விசித்திரமான சட்ட திட்டங்களைக்கொண்ட நாடுகள் பற்றித் தெரியுமா... அப்படியான நாடுகளும், அங்கிருக்கும் சில விநோதச் சட்டங்களும் இங்கே..!

என்னங்க சார் உங்க சட்டம்?

இத்தாலியிலுள்ள டூரின் நகரில், செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பவர்கள், தினசரி குறைந்தது மூன்று முறையாவது தங்களது நாயை நடப்பதற்காக வெளியில் கூட்டிச் செல்ல வேண்டும். ஒருவேளை அப்படிச் செய்யவில்லை என்பதை நகர நிர்வாகம் கண்டறிந்தால், அபராதமாக 500 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,000) வசூலிக்கப்படும்.

என்னங்க சார் உங்க சட்டம்?

மர்மதேசமான வடகொரியாவில், பெண்கள் 18 வகை ஹேர் ஸ்டைலும், ஆண்கள் 10 விதமான ஹேர் ஸ்டைலும் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி. அதிலும், யாராவது அதிபர் கிம் ஜாங் உன்னின் ஹேர் ஸ்டைலைக் காப்பியடித்தால் நிச்சயம் சிறைதான். அதேபோல, தேசத்தந்தை (இன்றைய அதிபரின் தாத்தா) கிம் இல் சங்-கின் நினைவுதினத்தையொட்டி, ஆண்டுதோறும் ஜூலை 8-ம் தேதியன்று யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் அங்கு சட்டம் இருக்கிறது.

என்னங்க சார் உங்க சட்டம்?

இலங்கையில் புத்தர் சிலைகளுக்கு முன்பு நமது முதுகுப் பகுதியைக் காட்டுவது அவமதிப்பாகக் கருதப்படுகிறது. எனவே, புத்தர் சிலைகளுடன் செஃல்பி எடுக்கவும், பேக்ரவுண்டில் புத்தர் சிலை இருக்கும்படி புகைப்படம் எடுக்கவும் அங்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

என்னங்க சார் உங்க சட்டம்?

சமோவா (Samoa) என்ற தீவு நாட்டில், மனைவிகளின் பிறந்தநாளை மறப்பது குற்றம். `எனது பிறந்தநாளைக் கணவர் மறந்துவிட்டார்’ என்று மனைவி புகார் கொடுத்தால், கணவர் சிறைக்குச் செல்லவேண்டியிருக்கும்.

என்னங்க சார் உங்க சட்டம்?

1992 முதல் சிங்கப்பூரில் சுவிங்கம் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. மீறிப் பயன்படுத்துவோர், வெளிநாட்டிலிருந்து வாங்கிவருவோர், விற்பனை செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது!

என்னங்க சார் உங்க சட்டம்?

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தில், எலெக்ட்ரீஷியன் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பல்பு / லைட் மாற்ற முடியும்.

என்னங்க சார் உங்க சட்டம்?

ஜார்ஜியா நாட்டிலுள்ள குவிட்மேன் நகரத்தில், கோழிகள் சாலையைக் கடக்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. கோழிகளை, எஜமானர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்யவே இந்தச் சட்டமாம்.

என்னங்க சார் உங்க சட்டம்?

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில், நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டைப் பகிர்வது குற்றம். இதில் விநோதம் என்னவென்றால், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே ஒரே ஐடி-யை நான்கு பேர் பயன்படுத்தலாம் என்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் மட்டுமல்ல மியூசிக், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குகளை வழங்கும் எந்தச் செயலியின் பாஸ்வேர்டையும் அங்கு பகிரக் கூடாது. மீறினால், ஓராண்டுச் சிறையும், அபராதமும் நிச்சயம்.